Jul 23, 2019

அண்ணா நூற்றாண்டு நூலகம் - ஒரு பருந்துப் பார்வை







அண்ணா நூற்றாண்டு நூலகம் :


தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல,படிக்கப் படிக்க அறிவு வளரும் எனும் குறளின் வாக்கிற்கு இணங்க,சென்னையில் 8  மாடிகளில் செம்மாந்து நிற்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.


மாணவர்களின் இஸ்ரோ பயணத்தை முடித்த பிறகு,இடையில் கிடைத்த அரை நாளினை எப்படி செலவிடுவது எனும் எண்ணம் தோன்றியவுடனே நினைவிற்கு வந்தது அண்ணா நூற்றாண்டு நூலகமே.


சென்னையில் பார்க்க வேண்டிய,படிக்க வேண்டிய மட்டுமல்லாது நேரத்தைப் பயனுடன்  செலவிட வேண்டிய,தவறவிடக் கூடாத இடம் அண்ணா நூற்றாண்டு நூலகம்.



ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையானது அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகும்.3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது.தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம்,மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது.இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக யுனஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.



தளங்கள் :


சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு:


பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது.உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களைக் குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.

போட்டித் தேர்வுகளுக்குப் படிப்போருக்கான கூடமும்,போதுமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.




மெய்ப்புல அறைகூவலர் பிரிவு :


மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இப்பிரிவில் மெய்ப்புல அறைகூவலர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம்.இப்பிரிவில் 500 க்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன.



நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு :



நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ்,ஆங்கிலம்,இந்தி,மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும்,பருவ இதழ்களும் உள்ளன.தமிழில் வெளியிடப்படும் அனைத்து பருவ இதழ்களும் இங்கு உள்ளன என்பது தனிச்சிறப்பு.
கல்வி,கலை,இலக்கியம்,பண்பாடு,அறிவியல்,தொழில்நுட்பம்,விளையாட்டு,சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன.உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்து பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின்  பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன.இங்கு பருவ இதழ்கள்,வார இதழ்கள்,மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன.கூடுதலாக பழைய நாளிதழ்களும்,பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.




குழந்தைகள் பிரிவு :


முதல் தளத்தில் 15000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது.இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
பொதுமக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம்.குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும்,அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன.குழந்தைகள் கலை  நிகழ்ச்சிக்கென்று சிறு மேடையும் அமைக்கப் பட்டுள்ளது.இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன.இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும்,விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.




தமிழ் நூல்கள் பிரிவு :



இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.'அ' பிரிவில்,அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள்,
பொது நூல்கள்,பொது அறிவு நூல்கள்,கணினி அறிவியல்,கலைக் களஞ்சியம்,தொகுப்பு நூல்கள்,
இதழியல்,தத்துவம் மற்றும் உளவியல்,சுய முன்னேற்ற நூல்கள்,சமய நூல்கள்,ஆன்மீகம்,
அரசியல்,பொருளியல்,சட்டம்,வணிகவியல்,
மொழியியல்,நாட்டுப்புறவியல்,தமிழ் அகராதி,இலக்கண நூல்கள்,அறிவியல்,வானியல்
கணிதவியல்,தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல்,வேளாண்மை, நுண்கலைகள்,
திரைப்படவியல்,விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.



'ஆ' பிரிவில்,சங்க இலக்கிய நூல்கள்,
சிற்றிலக்கியங்கள்,கவிதைகள்,கதைகள், கட்டுரைகள்,சிறு கதைகள், புதினம்,நாடகம்,பயணக் கட்டுரைகள்,கடிதங்கள்,நகைச்சுவை நூல்கள்,வாழ்க்கை வரலாறு,இலங்கைத் தமிழர் வரலாறு,புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.




ஆங்கில நூல்கள் பிரிவு :



மூன்றாவ‌து முத‌ல் ஏழாம் த‌ள‌ம் வரை ஆங்கில‌ நூல்க‌ள் பாட‌ வாரியாக‌ ப‌குத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.


மூன்றாவது தளத்தில் ஆங்கில மொழியிலான பல புத்தகங்கள் உள்ளன.பொது அறிவு,கணினி அறிவியல்,நூலகம் & தகவல் அறிவியல்,
தத்துவம்,உளவியல்,அற இயல் மற்றும் மதம், சமூகவியல்,புள்ளியியல்,மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன.



நான்காவது தளத்தில் பொருளியல்,சட்டம்,பொது நிர்வாகம்,கல்வி,வணிகவியல்,மொழியியல்,
மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன.



ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல்,
கணிதவியல்,வானவியல்,இயற்பியல்,
வேதியியல்,புவியமைப்பியல்,உயிரியல்,மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.



ஆறாவது தளத்தில் பொறியியல்,வேளாண்மை, உணவியல்,மேலாண்மை, கட்டிடக்கலை,
நுண்கலை,மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன.


ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல்,
வேதியியல்,சுற்றுலா & பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன.



எட்டாவது தளத்தில் பள்ளிக் கல்வித்துறையின் "கல்வி தொலைக்காட்சி "யின் அலுவலகம் இயங்குகிறது.



குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.நூலகம் முழுவதும் குளிரூட்டப்பட்டு ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமையிடம் போன்று காணப்படுகிறது.




முதலில் இவ்வளவு பெரிய கட்டடத்தில் நூலகம் என்பது மாணவர்கள் நம்பமுடியாத ஒன்றாய் இருந்தது!



ஒவ்வொரு தளமாக அழைத்துச் சென்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்ததும் மாணவரது ஆர்வம் பன்மடங்கு அதிகரித்ததைக் கண்கூடாய்க் காண முடிந்தது.



குறிப்பாகக் குழந்தைகள் பிரிவு மாணவர்களைக் கவர்ந்திழுத்தது.புத்தகங்களைத் தேடிப்படிக்க ஆரம்பித்தனர்.மாணவர்களின் அறிவுத்தேடல் ஆசிரியர்களுக்கு என்றுமே மகிழ்வைத் தரக்கூடிய ஒன்றேயாகும்.



அரைநாள் பொழுது அற்புதமாய்க் கழிந்தது!


சென்னையில் தவறவே விடக் கூடாத இடம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்.ஒவ்வொரு மாவட்டத்திலும் இதைப் போன்ற நூலகம் அமைப்பது எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்றமளிப்பதாய் அமையும்.


புகைப்படங்கள் :







Add caption












Jul 22, 2019

சந்திரயான்-2 வெற்றிப்பயணம்.







வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-2 குவியும் பாராட்டுக்கள் -இஸ்ரோ தலைவர் பேட்டியின் விவரம்:

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த இராக்கெட்டிற்கான இருபது மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43க்கு துவங்கப்பட்டது. இதற்குப் பிறகு இராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பணிகள் துவங்கின.இந்தப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்த நிலையில்,ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி.மார்க் III இராக்கெட் சீறிப்பாய்ந்தது.
இராக்கெட் ஏவப்பட்டு இரண்டு நிமிடங்களில் அதன் வெப்பத் தடுப்பு கவசம் விலகியது.

அடுத்ததாக அதனுடைய க்ரையோஜெனிக் இராக்கெட் செயல்பட ஆரம்பித்தது.சரியாக 16.55 நிமிடங்களில் க்ரையோஜெனிக் எஞ்சின் நிறுத்தப்பட்டு,திட்டமிட்டபடி சந்திரயான் - 2 விண்கலம் இராக்கெட்டிலிருந்து பிரிந்தது.
இந்த புறப்பாடு இரண்டு காரணங்களுக்காக வெகுவாகக் கவனிக்கப்பட்டது.முன்னதாக சந்திராயன் - 2 ன் பயணம் ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 2.51க்குத் துவங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,கடைசி நேரத்தில் அதாவது ராக்கெட் புறப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பாக சில தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,இராக்கெட்டின் பயணம் ரத்துசெய்யப்பட்டது.
இதற்குப் பிறகு பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு,இன்று ஜூலை 22ஆம் தேதி ஏவப்படுமென அறிவிக்கப்பட்டது.
இரண்டாவதாக,இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா தனது விண்வெளி ஆய்வில் அடுத்த கட்டத்தை எட்டிப்பிடிக்கவிருக்கிறது. ஏற்கனவே சந்திராயன் -1ன் மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருக்கிறது. இருந்தாலும்,முதன் முறையாக இந்தப் பயணத்தின் மூலம்தான் இந்தியா அனுப்பும் கருவிகள் நிலவில் தரையிறங்குகின்றன. ஆகவே,நிலவில் மெதுவாக, திட்டமிட்டபடி,குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்க முடியுமா? இதுவரை யாரும் அடையாத தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமா?என்பதை இந்தியா இந்தத் திட்டத்தின் மூலம் பரிசோதிக்கும்.

இராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோவின் தலைவர் திரு.சிவன், சந்திரயான் 2 ஐச் சுமந்து சென்ற புவிசார் செயற்கைக்கோள் ஏவு வாகனம் - ஜிஎஸ்எல்வி மார்க் 3 இராக்கெட் - திட்டமிட்ட தூரத்தைவிட கூடுதலாக பறந்திருப்பதாகவும் இதனால் சந்திரயானைக் கட்டுப்படுத்த கூடுதல் கால அவகாசம் கிடைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சந்திரயானின் பயணத்தில் நாளை செய்ய வேண்டிய பணிகள் இன்றே முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

'இது நிலவை நோக்கிய இந்தியாவின் வரலாற்று பயணத்தின் தொடக்கமாக உள்ளது என்று தெரிவித்த அவர்,கடந்த வாரம் இராக்கெட் ஏவுவதற்கு முன்பாக தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதும் விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றி,அதனை ஒன்றரை நாட்களுக்குள் சரிசெய்ததாகவும் அடுத்த ஒன்றரை நாட்கள்,அந்தப் பணிகள் சரியாக நடைபெற்றிருக்கிறதா என்பதை சோதித்து உறுதிசெய்ததாகவும் தெரிவித்தார்.
"இந்த மிகப்பெரிய திட்டம் இஸ்ரோ குழுவின் கடினமான உழைப்பால் சாத்தியமானது. குறிப்பாக பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் பிற ஊழியர்கள் இதற்காக தொடர்ந்து பணி செய்தனர்."

"சந்திரயான் - 2 திட்டத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பணிவார்ந்த நன்றிகளை தெரிவிப்பது எனது கடமை."
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகத் துவங்கிய இந்தத் திட்டத்திற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகல் பார்க்காமல்,தங்கள் குடும்பத்தை மறந்து பணியாற்றியதாக கூறிய சிவன்,இத்தோடு பணிகள் முடிவடைந்துவிடவில்லையென்றும் அடுத்த ஒன்றரை மாதத்திற்கு தொடர்ச்சியாக பணிகள் இருப்பதாகவும் 'விக்ரம் லாண்டர்' நிலவில் தரையிறங்கி,அதிலிருந்து பிரக்யான் வாகனம் நிலவில் உலாவ ஆரம்பிக்கும் 15 நிமிடங்கள்தான் இந்தத் திட்டத்தில் மிக முக்கியமானவை என்றும் சிவன் கூறியிருக்கிறார்.

"இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் இதற்காக காத்திருக்கிறது.அதை தற்போது நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் ''என்று சிவன் தான்ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

சந்திரயான் 2 -இஸ்ரோ பயண அனுபவங்கள் :





நகராட்சி நடுநிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம்,
திருப்பூர் வடக்கு,
திருப்பூர் .


இஸ்ரோ பயண அனுபவங்கள் :


ஒளிரும் இஸ்ரோவின் ஒத்தி வைக்கப்பட்ட வெற்றியைக் காண 21/07/19 ஞாயிறு காலை 6.30 மணியளவில் மாணவர்கள் நால்வரும் தம் பெற்றோருடனும்,மிகுந்த ஆர்வத்துடனும் திருப்பூர் இரயில் நிலையத்தில்  காத்திருந்தனர்.தங்கள் குழந்தைகளை இதுவரை தனியே வெளியே அனுப்பாத பெற்றோர் சற்று பதற்றத்துடன்,
மாணவர்களுக்கு தங்களது  ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் மற்றொரு முறை  நினைவூட்டினர்.
பயணத்திட்டத்தை மீண்டும் ஒருமுறை விவரித்ததும்,மாணவர்களது ஆர்வம் பன்மடங்கு அதிகரித்ததை அவர்களின் முகங்களின் பிரகாசங்களில் இருந்து உணர முடிந்தது.

பயணங்கள் என்றுமே இனிமையானவை.
அதிலும் நண்பர்களுடன் கல்விச்சுற்றுலா எனும்போது குதூகலம் கும்மாளமிடுவது இயல்பே.அதற்கு நம் மாணவர்களும் விதிவிலக்கு அன்று.மனதுக்குள் மத்தாப்புடன் இரயில் நிலையத்தில் நடை போட்டனர்.

இரயில்நிலைய அமைப்பு,இரயில்களின் புறப்பாடு மற்றும் பெட்டிகளின் நிறுத்தம் (கோச் பொசிசன்) உள்ளிட்டவை குறித்து ஆசிரியரால் மாணவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட  இரயில் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு புதுமையானதாகவும்,
பயனுள்ளதாகவும் இருந்தன.

மாணவர்கள் வகுப்பில் பேசிக் கொண்டே இருப்பது ஆசிரியருக்கு பெரும் சிக்கல் தான்.ஆனால் தனியான பயணங்களில் அது வேறு விதமாக,இரசிக்கக் கூடியதாகவே அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.
இப்பயணமும் அதற்கு விதிவிலக்கில்லை.
இரயிலின் இருக்கையில் அமர்ந்ததும் உலகக் கோப்பை முதல் உள்ளூர் செய்திகள் வரை அனைத்தையும் மாணவர்கள் தங்களுக்குள்  விவாதித்தனர்.கலந்துரையாடி விமர்சனங்களை முன்வைத்தனர்.


இரயில் -ஜன்னலோர இருக்கை - கையில் புத்தகம் சொர்க்கம் வேறு உண்டோ!கிடைத்த ஒரு ஜன்னலோர இருக்கையை மணிக்கு ஒருவர் என மாணவர் நால்வரும் பகிர்ந்து பயன்படுத்தியது உள்ளபடியே மாண்புக்குரிய ஒன்று.


ஆக்கப்பூர்வமாய் பேசுவதில் மட்டுமல்ல,
அமைதியாய் அறிவைச் சேகரிப்பதிலும் தாங்கள் வல்லவர்கள் என்பது மாணவர்களால் மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டது.ஆம்.தொடர்ந்து அரட்டைகளில் இறங்காமல் தாம் கொண்டு வந்திருந்த நூலக புத்தகங்களை அமைதியாய் வாசிக்க ஆரம்பித்தனர்.

வாசிப்பினூடே சந்திரயான் 2 பற்றியும்,தாம் காண உள்ள விண்வெளிமையம் குறித்தும் அவ்வப்போது அறிவுப்பூர்வமான அலசல் நடந்தது.

மாணவர்களை நூலகங்களில் உறுப்பினராக்கி,வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தது வீண் போகவில்லை.
கண் முன்னே அதன் விளைச்சல் விளைந்து நிற்கின்றது. உண்மையிலேயே ஒரு ஆசிரியராக இது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. நூலகமும் இணையமும்
இணைந்த டிஜிட்டல் தலைமுறைகள் நம்
மாணவர்கள்!

இரயில் பயணத்தை மாணவர்கள் பெரிதும் அனுபவித்தனர் என்பதில் ஐயமில்லை.ஆயிரம் வகுப்புகளில் கற்க முடியாதவற்றை ஒரு இரயில் பயணம் கற்றுக் கொடுத்துவிடுகிறது.பார்க்க  மட்டுமல்ல பயணிக்கவும் திகட்டாதது இரயில்.அறிவுத் திரள்கள் நிறைந்த நம் மாணவர்களை சென்னை தூறலுடன் வரவேற்றது.

சென்னையில் இரவு ஓய்விற்குப் பின்,22/07/2019 திங்கள் காலை சென்னையிலிருந்து "சூலூர்பேட்டை" என்னும் இடத்திற்கு அடுத்த இரயில் பயணம் தொடர்ந்தது.

சூலூர்பேட்டையில் இறங்கி முன்பதிவு செய்யப்பட்ட அறையில் மாணவர்கள் சிறிது ஓய்வு எடுத்தனர்."தான் எடுத்த பணியினை முழுமூச்சாய் செய்வோருக்கு அடுத்த வேலை தான் ஓய்வு" எனும் மொழிக்கேற்ப தாம் தயாரித்த கட்டுரைகளை மீண்டுமொரு முறை படித்துப் பார்த்து அதில் ஏற்பட்ட சிறு சிறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

மறுநாள் பொதுத்தேர்வு முடிவுகள் என அறிந்த மாணவன் முந்தின இரவு உறங்காமல் இருப்பது போல,சந்திராயன் 2  வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

காலை பத்து மணியளவில் இஸ்ரோ செல்ல மாணவர்கள் தயாராகினர்.ஆந்திர அரசின் சிறப்புப் பேருந்து சூலூர்பேட்டையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் சென்றது.
கிட்டத்தட்ட 18 கி.மீ தொலைவு கொண்ட இப்பயணம் வித்தியாசமான ஒன்றாக அமைந்தது.

இருபுறமும் வங்காள விரிகுடா வழிவிட,இடையில் பாதை சென்றது.கடலன்னையின் எழிலை அள்ளிப் பருகியபடி  நமது மாணவர்கள் பயணத்தை அனுபவித்தனர்.

ஆய்வு மையத்தின் வாயிலில் பேருந்து நின்றது.வாயிலின் உள்ளே நாம் நுழைய முதற்கட்ட உள்ளூர் காவலரின் சோதனை ஆரம்பித்தது.நமது அனுமதிக் கடிதம் மற்றும் அடையாள அட்டையினை அணுஅணுவாகச் சோதித்து,உரிய நபர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ஆய்வு மைய முதன்மை வாசலில் நுழைய அனுமதிக்கின்றனர்.

ஆய்வு மையத்தின் பேருந்து நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.அங்கு இராணுவ மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் சோதனையும், ஆட்களையும்,பொருட்களையும்
இயந்திரத்தின் துணையுடன் சோதித்தலும் தொடர்கின்றன.

இரண்டாம் கட்ட சோதனைக்குப் பின் ஒரு 500 மீட்டர் நடை பயணமாகச் செல்ல வேண்டியுள்ளது.500 மீட்டரைக் கடந்தவுடன் இஸ்ரோ அதிகாரிகள் நமது ஆவணங்களைச் சோதித்து உறுதிப்படுத்திய பின் நுழைவிற்கான அனுமதிக் கடிதத்தில் சீலிட்டு நம்மை Launch View Gallery இன் உள் அனுமதிக்கின்றனர்.அனுமதிக் கடிதத்துடன் இராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் பல்வேறு சுவரொட்டிகள் (Wall posters),
சந்திரயான் 2 குறித்த விளக்க கையேடு மற்றும் சந்திரயான் 2 படம் அச்சிடப்பட்ட தொப்பிகளை அன்பளிப்பாக வழங்குவது சிறப்பு.


பல்வேறு சோதனைகளுக்கு தாமதம் ஆன போதும்,அவற்றை ஒவ்வொன்றாகத் தாண்டும்போது ஏற்படும் மகிழ்ச்சி,விருந்திற்குப் பின் சமையற் கலைஞருக்கு கிடைக்கும் பாராட்டு போன்று எல்லையற்றது.அதனை நம் மாணவர்கள் நேரில் உணர்ந்தனர்.

விண்வெளி மையத்தில் நம் மாணவர்கள் மூன்று வித இடங்களைக் கண்டு இரசித்தனர்.

1) Rocket Garden.
2) Launch View gallery.
3) Space museum.

Rocket garden இல் 1:1 உள்ளிட்ட பல்வேறு அளவிலான,SLV முதல் இன்றைய GSLV Mk3 வரையில் அனைத்து வித இராக்கெட்டுகளையும் அவை குறித்த விளக்கங்களுடன் காட்சிக்கு வைத்துள்ளனர்.அவற்றின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர்.
நமது மாணவர்கள் இராக்கெட்டுகளுடன் பல்வேறு கோணங்களில் புகைப்படம்  எடுத்து மகிழ்ந்தனர்.

ஆறு பிரிவுகளைக் கொண்ட ஸ்பேஸ் மியூசியத்தில் இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி கண்முன்னே நிழலாகிறது.தாம் படித்துத் தெரிந்தவற்றுடன் Musium இல் உள்ளவற்றை ஒப்பிட்டு மகிழ்ந்தனர் நம் மாணவர் .Space museum கண்டுகளிக்க ஒரு நாள் போதவே போதாது.இதற்காகவே தனியாகப் பயணம் வர வேண்டும்.அத்தனை அற்புதமாய் மிளிர்கிறது Space Musium.

இறுதியாக Launch View Gallery.இதற்காகத்தான் இத்தனை மைல்கள் தாண்டி வந்தோம் நாம்.கிரிக்கெட் ஸ்டேடியம் போன்று படிக்கட்டு அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது Launch View Gallery.உரிய இடத்தில் அமர்ந்து,கவுண்ட் டவுனை மாணவர்கள் கண்காணிக்க ஆரம்பித்தனர்.இங்கு அமர்ந்து பார்க்கும் போது சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் இரு Launch Pad களும் தெளிவாகத் தெரிவதில்லை.ஆனால் சந்திரயான் 2 GSLV Mk 3 இல் பொருத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதைப்  பெரிய திரைகளில் காண முடிகிறது.

அங்கு என்ன நடக்கிறது என்பதை மூன்று பெரிய திரைகளிலும் தெளிவாகக் காண முடிகிறது.ஆங்கிலத்தில் நிகழ்வுகளை அழகாக விவரிக்கின்றனர்.

நேரம் ஓட ஆரம்பிக்கிறது. கவுண்ட் டவுன் ஓடுகிறது.மாணவர்களின் இதயத்துடிப்பும் வேகமாக ஓடுவதை உணர முடிகிறது.கவுண்ட் டவுனில் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.Gallery இல் அறிவிப்பு உச்சகட்டத்தை எட்டுகிறது. 10,9,8......... 2,1,0 சீறிட்டுக் கிளம்புகிறது இராக்கெட்.


அந்த கனத்தின் உணர்வுகளை விவரிக்கவே முடியாது.மனம் முழுமையான நிறைவடையும் கனம்.சுற்றி எங்கெங்கு காணினும் உற்சாகக் கூச்சல்கள்,வெற்றி முழக்கங்கள்.நாமே ஏதோ பெரிதாய் சாதித்த உணர்வு."இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என விண்ணியலை அறிந்து கொள்ளுதலின் முதற்படியை முற்றாய் கடந்த முழு நிறைவுடன் விண்வெளி மையத்திலிருந்து மாணவர்கள் தம் இருப்பிடம் திரும்பினர்!

                                     Photo gallery :













Jul 16, 2019

Income Tax-Reminder






July 31,2019 is the last day for filing Income Tax Return (ITR 1) for the assessment year 2019-20 (the financial year 2018-19).If your gross total income before allowing deductions under Section 80C and 80U exceeds Rs 2,50,000 in a financial year,it is mandatory to file returns.

The July 31 deadline is,however,only for individuals. (ITR 1).

Filing your tax after the due date is called belated ITR and it can be submitted till March 31,2020.However,if you fail to adhere to this deadline as well,you will have to wait for a notice from the tax department for filing your ITR.

While you can file belated ITR till March 2019,it will attract fine.

If you file your IT return by December 31,2019 then the fine is Rs 5,000 The penalty for filing January 1 and March 31,2020,is Rs 10,000.

For those whose income is below Rs 5 lakh,the late fine is capped at Rs 1,000.

For taxpayers whose total income is not above Rs 5 lakh,the fine amount will not exceed Rs 1,000 irrespective of when it is filed (before March 31,2020).

There is also the possibility that the deadline extends until August 31st.But it is wise to file return immediately without waiting for it.

Jul 15, 2019

ISRO -Experiences








I went to ISRO with our four students to be the launch witness of Chandrayaan 2 on 14/07/2019.Really it's a great and unforgettable experience.Isro's hospitality was meritorious.When we see from the launch view gallery,the two launch pads of sriharikota are clearly visible.

Space Theme Park:


A Space Theme Park is being realized at SDSC SHAR to enable the citizens of this nation to witness the launches taking place from the space port of India.It includes,

1.Rocket Garden:

All the 1:1 ratio of beautiful ISRO launch vehicles Sounding Rocket, SLV, ASLV,PSLV, GSLV, MK-3 will be realised with a provision to go inside.Lawns will be developed along with photo points fountain will be realised at the middle of the rocket garden.

2. Launch View Gallery:

The Space Port of India,naturally attracts the visitors to witness the launch activities and cheer for the pride of our Nation.At present, there are no appropriate facilitieso for  accommodating more number of visitors to view the launch at Sriharikota.This would allow thousands of viewers to witness the launch.

3.Space Museum:

Space Museum provides a telltale account of the Indian Space Programme from its infancy.The story of the Indian Space Programme is unfurled in six sections,comprising of history,education,technology, applications, global and the future.

Nearest Railway Station : Sullurpeta,which is
18 Kms away from Sriharikota. Limited Public/Private Transport is available from Sullurpeta to Sriharikota.


While we were watching the space theme park,
there was an announcement came from ISRO.

"A technical snag was observed in launch vehicle system at 1 hour before the launch.As a measure of abundant precaution,Chandrayaan 2 launch has been called off for today.Revised launch date will be announced later"

The above announcement by isro was unexpected!

It's a huge disappointment for our student.But a lot of things have been learned,though.Rather than success,much can be learned from effort!

Thanks to the ISRO that gave this opportunity.Isro's integration was great.Special thanks to the Andhra Transport Department (APSRTC) which provided excellent travel experience.


The suspicions they had at the time were beyond measure.Each question was raised for response.From here our students received lot of  responses from what they saw and heard.

Currently our students learned the base language of the rocket.They will speak with it,soon.

"The general truth is that a small fire can produce a large wildfire."

Let's wait a little bit for success!!!




Municipal Middle School,
Mettupalayam,
Tirupur north,
Tirupur.