Nov 29, 2018

திருப்பூர் - மேட்டுப்பாளையம் பள்ளியில் PSLV C43 இராக்கெட் Launch ஐ நேரலையில் பார்த்த மாணவர்கள்.




நகராட்சி நடுநிலைப் பள்ளி,
மேட்டுப்பாளையம்,
திருப்பூர் வடக்கு,
திருப்பூர்.

விண்ணில் பாய்ந்தது
PSLV C43 இராக்கெட் - நேரலையில் கண்டு களித்த மாணவர்கள்.

இன்று (29/11/18) இஸ்ரோவின் PSLV C43 இராக்கெட் செலுத்துதல் மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்பட்டது.

இராக்கெட் செலுத்துதலின் போது மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்,
கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு,கவுண்டவுன் ஆகியவற்றை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

குறிப்பாக கவுண்டவுன் வந்த போது மாணவர்களும் எண்களைக் கூறியது அவர்களின் விண்வெளி ஆர்வத்தை வெளிப்படுத்துவதாய் இருந்தது.

PSLV C43 இராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவின் HysIS உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்கள் பற்றிய அடிப்படையான தகவல்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

இந் நிகழ்வு மாணவர்களின் விண்வெளி ஆர்வத்தைத் தூண்டி விடுவதாய் இருந்தது.










இராக்கெட் குறித்த தகவல்கள் :

புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்களை சுமந்துச் செல்லும் பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட் இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றார்போல் உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் விண்வெளித்துறையில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட் மூலம் இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 28 மணிநேர கவுண்டவுன் நேற்று காலை 5.57 க்குத் தொடங்கியது.

44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட்டுடன் வெளிநாடுகளின் 30 சிறு மற்றும் நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதில்,அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்களும், ஆஸ்திரேலியா,கனடா, ஸ்பெயின்,மலேசியா, கொலம்பியா, ஃபின்லாந்து,நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும் இடம்பெற்றுள்ளன.




இஸ்ரோ தயாரித்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவிலும்,மற்ற 30 செயற்கைக்கோள்களை 504 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மேலாண்மை வனப்பகுதி,கடலோரப் பகுதி,உள்நாட்டு நீர் நிலைகள்,மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக 380 கிலோ எடைகொண்ட ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட்டை தொடர்ந்து டிசம்பர் 4-ம் தேதி இஸ்ரோவின் ஜிசாட்-11 வர்த்தக செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட உள்ளது.


Nov 23, 2018

இஸ்ரோ பயண அனுபவங்கள் மற்றும் புகைப்படங்கள் தொகுப்பு.


நகராட்சி நடுநிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்,
திருப்பூர் வடக்கு,
திருப்பூர் மாவட்டம்.




இஸ்ரோ - OSF சிந்தனைத் திறனறிதல் போட்டியின் வெற்றியாளர் குறித்த செய்திகளின் தொகுப்பு,
இஸ்ரோ பயண அனுபவங்கள்
மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு:


வெற்றியாளர் குறித்த நாளிதழ் செய்திகள்:

The Hindu



New Indian Express

                           

                                தமிழ் இந்து


                                 தினத்தந்தி


தினமலர்







இஸ்ரோ பயண அனுபவங்கள்:

21/11/18 காலை 10 மணியளவில், இஸ்ரோவின் மூன்று கட்ட கடும் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு வெற்றியாளர்களாகிய மாணவர்களுடன் வளாகத்தினுள் நுழைந்தோம்.

இஸ்ரோ தும்பா ஆய்வு மையத்தின் தோற்றம், முதலில் செய்யப்பட்ட சோதனைகள்,முதன் முதலில் சைக்கிள் மூலம் இராக்கெட் பாகங்களை எடுத்துச் சென்ற விதம் ஆகியவற்றை அலுவலர்கள் கூறிய போது மாணவர்கள் மிகுந்த வியப்பிற்கு உள்ளாயினர்.

அடுத்ததாக விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் சோதனைக் கூடம்  மாணவர்களை  ஆச்சரியப்படுத்தியது.

இராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் உண்மையான பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.அவை குறித்த தகவல்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன.


கிரையோஜெனிக்  என்ஜின்,சந்திரயான் 1, மங்கள்யான் குறித்த அரிய செய்திகள் மாணவர் சிந்தனையைத் தூண்டுபவையாக இருந்தன.

ஆரியப்பட்டா முதல் GSLV மாக் 29 வரையிலான இராக்கெட்டுகளின் செயல்பாடுகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

விண்வெளிக்  குப்பைகளை நீக்கும் முறை குறித்த வினாவிற்கு மாணவர்கள் புதுமையான பதில்களைக் கூறினர்.

அடுத்து ISRO வின் தோற்றம் முதல் இன்று வரையிலான வரலாறு மற்றும் சாதனைகள் ஆவணப் படமாகக் காட்டப்பட்டன.

விக்ரம் சாராபாய் முதல் சிவன் வரை இஸ்ரோவின் இயக்குநர்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் குழுக்களின் சாதனைகள் ஆவணப்படத்தில் காட்டப்பட்டன.

ஒளிப்படத்தில்  காட்டப்பட்ட,தமிழர்களுக்கு பெருமை அப்துல் கலாம் அவர்கள் மற்றும் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் வரலாறு மற்றும் சாதனைகள் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தன.

மதிய உணவினை முடித்துக் கொண்டு அடுத்ததாக பிளானட்டோரியம் பார்வையிட வாய்ப்பு கிடைத்தது.

பல்வேறு தாவர உயிரிகள் மற்றும் அவற்றின் தனித்தன்மைகள் மற்றும்
சிறப்புகள் குறித்த தகவல்கள் எங்கள் குழுவினருக்கு  ஆச்சரியம் அளித்தன.


அடுத்ததாக  அறிவியல் விளையாட்டு மையத்திற்குள் நுழைந்தோம்.அறிவியல் விளக்கங்களுடன்,
அறிவியல்பூர்வமாக அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு அரங்கமும், அந்த விளையாட்டுகளுக்கான விளக்கங்களும் அற்புதமாக இருந்தன.

இறுதியாக Hello earth என்ற அறிவியல் 3D ஆவணப்படம் மிகுந்த பிரமிப்பு அளிப்பதாய் இருந்தது.மனிதன் தோன்றியது முதல் இன்று வரையிலான மொழியின் வளர்ச்சி,தகவல் தொழில்நுட்பத்தின்  அசுரப் பாய்ச்சல்,அண்டங்கள் மற்றும் பேரண்ட ஆச்சரியங்கள், எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் வேற்றுகிரக மனிதனுக்கான தகவலை மனிதர்களாகிய நாம் அளித்துள்ள முறை குறித்த  முப்பரிமாண ஆவணப் படம் மாணவர்களை உச்ச பட்ச ஆச்சரியப்படுத்தியது என்றால் அது மிகையில்லை.


மிகக் சிறந்த அனுபவங்களைப்  பெற்ற நம் அரசுப் பள்ளி மாணவர்கள் தாமும் விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை கைக்கொண்டவர்களாய், அறிவுடனும்,மகிழ்வுடனும் ஆய்வு மையத்திலிருந்து திரும்பினர்.

சிறு தீப்பொறி பெரும் நெருப்பிற்கு ஆரம்பம் அன்றோ?

ISRO நிறுவனத்திற்கும்,நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Open Space Foundation அமைப்பிற்கும், மூலகாரணமாய் விதையிட்ட KOY-ICT Group Admins மற்றும் உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

                 தினமலர் - பயணக் கட்டுரை



புகைப்படத் தொகுப்பு: