Nov 29, 2018

திருப்பூர் - மேட்டுப்பாளையம் பள்ளியில் PSLV C43 இராக்கெட் Launch ஐ நேரலையில் பார்த்த மாணவர்கள்.




நகராட்சி நடுநிலைப் பள்ளி,
மேட்டுப்பாளையம்,
திருப்பூர் வடக்கு,
திருப்பூர்.

விண்ணில் பாய்ந்தது
PSLV C43 இராக்கெட் - நேரலையில் கண்டு களித்த மாணவர்கள்.

இன்று (29/11/18) இஸ்ரோவின் PSLV C43 இராக்கெட் செலுத்துதல் மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்பட்டது.

இராக்கெட் செலுத்துதலின் போது மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்,
கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடு,கவுண்டவுன் ஆகியவற்றை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

குறிப்பாக கவுண்டவுன் வந்த போது மாணவர்களும் எண்களைக் கூறியது அவர்களின் விண்வெளி ஆர்வத்தை வெளிப்படுத்துவதாய் இருந்தது.

PSLV C43 இராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவின் HysIS உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்கள் பற்றிய அடிப்படையான தகவல்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

இந் நிகழ்வு மாணவர்களின் விண்வெளி ஆர்வத்தைத் தூண்டி விடுவதாய் இருந்தது.










இராக்கெட் குறித்த தகவல்கள் :

புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்களை சுமந்துச் செல்லும் பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட் இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றார்போல் உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் விண்வெளித்துறையில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் புவி கண்காணிப்புக்கான ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட் மூலம் இன்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 28 மணிநேர கவுண்டவுன் நேற்று காலை 5.57 க்குத் தொடங்கியது.

44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட்டுடன் வெளிநாடுகளின் 30 சிறு மற்றும் நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதில்,அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்களும், ஆஸ்திரேலியா,கனடா, ஸ்பெயின்,மலேசியா, கொலம்பியா, ஃபின்லாந்து,நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும் இடம்பெற்றுள்ளன.




இஸ்ரோ தயாரித்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவிலும்,மற்ற 30 செயற்கைக்கோள்களை 504 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மேலாண்மை வனப்பகுதி,கடலோரப் பகுதி,உள்நாட்டு நீர் நிலைகள்,மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக 380 கிலோ எடைகொண்ட ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி 43 ராக்கெட்டை தொடர்ந்து டிசம்பர் 4-ம் தேதி இஸ்ரோவின் ஜிசாட்-11 வர்த்தக செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட உள்ளது.


1 comment: