Dec 1, 2018

ரோபோவால் சிந்திக்க முடியுமா?





ரோபோங்கறது விஷயம் நம்மளோட day to day lifeல தினசரி ஏதோ ஒரு விஷயத்துல பங்கெடுத்துட்டே தான் இருக்கு.
ரோபோக்கள் மட்டும் இல்லனா industrial, economic,social development and human survival அப்படிங்கறது இந்த over populationல இந்தியா போல ஒரு நாட்டுல ரொம்பவே கஷ்டமா போயிருக்கும்.
இங்க எல்லாமே ரோபோ தான்.
ஒரு ஆட்டோமொபைல் கம்பெனில Welding, assembly,handlingலருந்து packing வரை.
தொடர்ந்து traffic,commercialனு சகஜ வாழ்க்கைலயும் இப்போ ரோபோக்களை நாம‌ சந்திக்க ஆரம்பிச்சுட்டோம்.
இவ்வளவும் இருந்தும் இந்த மனுஷப்பயளுகளுக்கு தானா சிந்திக்கிற ஒரு ரோபோவை கண்டுபிடிக்கனும்ங்கறதுல மட்டும் ஏனோ ஒரு அலாதி பிரியம்.
ஒரு பொருளுக்கான அவசியம் இல்லாத பட்சத்துலயும் கூட எப்படியாவது அதை அடையனும்ங்கற ஒரு வேக வெறி.

Star wars,terminatorல தொடங்கி 2.0 வரை திரைப்படங்கள்ல நாம ரோபோவை ஒரு fantacy elementடாக மட்டும் தான் பாத்துட்டு இருக்கோம்.
ஒரு AI ரோபோவை பொதுவா 2வகையாக வடிவமைக்கலாம்
1. எந்திரன் ரோபோ டைப்.
அஃதாவது ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ் அடங்கிய ஒரு வஸ்துவுக்கு sports,music,arts,scienceனு எல்லா hard diskயும் அப்லோட் பண்ணிட்டு  சிட்டி அடானா ராகத்த அரக்கோணத்துல பிடிச்சு ஒரு பாட்டு பாடுனு சொல்லி சூப்பர் சிங்கர் ஆடிஷனுக்கு கூட்டிட்டு போறது.

2.அதே எலக்ட்ரானிக் சர்க்யூட்ஸ் அடங்கிய வஸ்துவ கூட்டிட்டு போய் ஒரு தெருவுல விட்டுட்டு நீயே நடக்க பேச பழக சிந்திக்க கத்துக்கோனு ஒரு குழந்தைய வளர்க்குற போல வளர்க்குறது, சொல்லி கொடுக்குறது.

ஆனா‌ துரதிஷ்டவசமான விஷயம் என்னனா இது ரெண்டும் சக்ஸஸ் ஆகுறதுக்கான‌ வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப குறைவு.
ஒரு மனுஷன் சிந்திக்கிறது போல மனுஷன விடுங்க,ஒரு சிட்டுக்குருவி சிந்திக்கிற அளவுக்காவுது ஒரு மெஷின் சிந்திக்கனும்னா அதுக்கான வாய்ப்புங்கறது வெறும் 2% தான்.

முதல் டைப்புல ட்ரை பண்ணினோம்னா வசீகரன போல சில ஹார்ட் டிஸ்க்க கைல கொடுத்து அதுலருந்து ஒரு கேள்வி கேட்டா சிட்டி பதில்லாம் சொல்லாது.
ஒரு 2வயசு குழந்தையோட சிந்திக்கும் திறனை ஒரு ரோபோவுக்கு கொடுக்கனும்னா கூட அதுக்கு குறைந்தபட்சம் ஒரு கண்ட்டைனர் அளவான memory recervoir வேணும்.
நம்ம மூளையானது பலப்பல சிக்கல்களை கொண்ட ஒரு ஆர்கானிக் சர்க்யூட்.
நிலாவுக்கே கூட போயிட்டு வந்த மனுஷனால ஒரு மூளை எப்டி செயல்படுதுனு இன்னும் கண்டுபிடிக்க முடியல..
சும்மானாச்சுக்கும் சில விஷயங்கள கணிச்சு மட்டும் வெச்சுருக்கான் அவ்வளவு தான்.. அதனால் தான் இதயம் கிட்னி லிவர்னு கெட்டு போனா கழட்டி போட்டுட்டு வேற கிட்னி எடுத்து பொருத்திக்கிற மனுஷனால மூளைல கையவும் கத்தியவும் வைக்கவே முடியல..
மனித மூளைய புரிஞ்சுக்கவே முடியாத மனுஷன் அதுக்கு இணையான ஒரு சிந்திக்கும் கருவிய கண்டுபிடிக்கிறது அத்தனை ஈஸினா நினைக்கிறீங்க?

அதுக்கும் மேல ஒரு ரோபோ தான் ஒரு artificial intelligenceனு மனுஷனுக்கு நிரூபிச்சு காட்ட வேண்டிய கட்டாயத்துலயும் இருக்கு.
ஒரு ரோபோவானது basic asimo விதிகளை obey பண்ணவும் வேண்டியிருக்கு,அதை தாண்டி AI turing தேர்வுல தேரவும் வேண்டியிருக்கு.

அந்த 3 விதிகள் என்னனா,
1.ஒரு ரோபோ எக்காரணத்தை கொண்டும் மனிதர்களை நோகடிக்கும் படி நடக்க கூடாது & மனிதர்கள் தன்னை நோகடிக்க அனுமதிக்கனும்.
2.எந்த சூழ்நிலையிலும் மனிதனோட கட்டளைக்கு கீழ்படியனும் அதே சமயம் முதல் விதியை மீறவும் கூடாது.
3.ஒரு ரோபோ தன்னை தானே தற்காத்துக்கனும் அதே சமயம் முதல் 2விதிகளையும் மீறவும் கூடாது.
இப்படிலாம் ரூல்ஸ் போட்டா வசீ தலை சுத்துதானு சிட்டி கேக்காது.
சிட்டிக்கு தான் தலை சுத்தும்.

இதுல ரெண்டாவது விதியின்படி நடக்க சொல்லி முதல் விதியை மீற வெச்சு AIRD evaluationல சிட்டிய நிராகரிச்ச பிரஃபசர் போரா நியாபகம் வராரா?

அடுத்து AI turing test. இதுக்கு imitation gameனு இன்னொரு பேரு உண்டு.
ஒரு ரோபோவையும் மனுஷனயும் ரெண்டு தனித்தனி பெட்டியில அடைச்சுட வேண்டியது.
எந்த பெட்டில யாரு இருக்குறதுனு யாருக்கும் தெரியாது.
இப்போ 2பேர் கிட்டயும் ஒரே set of questions கேக்க வேண்டியது.
எந்த சமயத்துலயும் ரோபோவோட பதிலை வெச்சு இது ரோபோனு வெளிய இருக்கிறவங்க கண்டு பிடிக்க முடியாத அளவு ரோபோ பதில் சொல்லனும்.
உதாரணத்துக்கு நாளைக்கு ஞாயித்துக்கிழமை வரியா நாம 2 பேரும் தாசில்தார் ஆஃபிஸ் வரை போயிட்டு ட்ரைவிங் லைசன்ஸ் அப்ளை பண்ணிட்டு வருவோம்னு கூப்டா வரேன்,வரல, எனக்கு நாளைக்கு ரீபூட் பண்ணிக்கிற வேலை இருக்கு இஞ்சின் மோட்டாருக்குலாம் ஆயில் போடுற வேலை இருக்குனுலாம் சொல்லி சமாளிச்சா அந்த ரோபோ ஃபெயில்.
அதுக்கு பதிலா ஏன்டா சன்டே அதுவுமா எந்த தாசில்தார் ஆஃபிஸுடா திறந்துருக்கும்? அதுமில்லாம தாஸில்தார் ஆஃபிஸ் போய்
டிரைவிங் லைசென்ஸ் எடுக்க போறேன்றியே நீயெல்லாம் எந்த இஸ்கூல்லடா படிச்சனு  பதில் கேள்வி கேட்டா அது பாஸ்.
ஆனா இதுக்கான வாய்ப்புங்கறது இன்னிக்கு அறிவியல் சூழல்ல ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மியாவே தான் இருக்கு.

இதுக்கு உதாரணமா இன்ட்டர்ஸ்டெல்லர் படத்தோட ஒரு காட்சிய சொல்லலாம் நினைக்கிறேன்.
விண்வெளி பயணம் போற நாயகன் ஒரு கட்டத்துல தன்னை அனுப்பிய நாசா மேல ஒரு சந்தேகம் கொள்ளுறான்.தான் போற ஷிப்ப ஓட்டுற AI SYSTEM தன் கிட்ட எதோ தகவல தனக்கு தெரியாம மறைக்கிறதாகவும் அது நாசாவோட உதவியோட தன்னை பயன்படுத்திக்கிறதாகவும் சந்தேகப்படுறான்.ஒரு இன்ட்டர்ஸ்டெல்லர் பயணத்துல ஒரு ஷிப்ப ஓட்டனும்னா அந்த AIக்கு எந்தளவுக்கு ஒரு அறிவு இருக்கனும்? கடல்ங்கற பிரபஞ்சத்துல கடுகளவு கூட முழுசா அறியாத மனுஷன்,அந்த மனுஷனால கூட புரிஞ்சுக்க முடியாத அல்லது புரிஞ்சுக்க கஷ்டப்படுற ஒரு விஷயமான இந்த பிரபஞ்சத்தையும் அது சார்ந்த அறிவியலையும் புரிஞ்சுக்குற ஒரு அறிவு இருக்கனுமில்லலயா? அப்படி ஒரு AI தான் அந்த ஷிப். அது மட்டுமில்லாம ஒரு படி மேல போய் தன்னை உருவாக்கின மனுஷனயே சூழ்நிலைக்கேற்ப ஏமாத்தி பயன்படுத்திக்கிட்டு தன்னோட‌ வேறு ஒரு திட்டத்தை அவன் மூலமா செயல்படுத்த முயற்சிக்குதுனா அதோட அறிவு எத்தனை அபாரமானதாக இருக்கனும்!
இது வெறும் கற்பனை மட்டும் தான்.
ஏன்னா எதிர்ல வர விண்கல்,கிரகங்கள் நட்சத்திரங்கள்னு எல்லாத்தையும் கணிச்சு விலகி போற அறிவு படைச்ச ரோபோ அது.ஆனா இன்னிக்கு தேதிக்கு ரோபோக்கள் நடக்குற பாதைல கிடக்குற சின்ன கல்ல எடுத்து போட்டு நடக்குற அளவுக்கு கூட அறிவார்ந்ததா இன்னும் முன்னேறல.
அது நிஜத்துல நடக்க இன்னும் 100வருஷமாவது ஆகலாம்.

ஒரு ரோபோ AIனு தன்னை சொல்லிக்கனும்னா அது Reasoning,problem solving,planning and learningல கில்லியா இருக்கனும்.
தீயில ஒரு சின்ன பையனும் அப்துல்கலாமும் மாட்டிக்கிட்டா யாரை முதல்ல காப்பாத்துவங்கற கேள்விக்கு hypothetical questionனு சொல்லியெல்லாம் ஜகா வாங்க கூடாது.
அதுக்கு சரியான பதிலை காரணத்தோடு தரனும்.
ஒரு கடல் அலை வேகமா வந்துட்டு இருக்குறதா வெச்சுப்போம்.
அந்த அலைக்கு பத்தடி தூரத்துல ஒரு ஆளும், 50அடி தூரத்துல ஒரு ஆளும் இருக்குறதா வெச்சுப்போம்.
நீ முதல்ல யார காப்பாத்துவங்கற கேள்விக்கு
50அடி தூரத்துல இருக்குறவன முதல்ல காப்பாத்துவேன்னு சொல்லி அதுக்கு ஒரு காரணமும் சொன்னா அந்த AI ரோபோவுக்கு 20/100 மார்க்.
அலைக்கு 10அடி அருகாமையில இருக்குறவன தான் முதல்ல காப்பாத்துவேன்னு சொன்னா அந்த AI ரோபோவுக்கு 30/100 மார்க்.
10அடி பக்கத்துல இருக்குறவன முதல்ல காப்பாத்திட்டு 50அடி தூரத்துல இருக்குறவன‌ ரெண்டாவதா காப்பாத்த முயற்சிப்பேன்னு சொன்னா அதுக்கு 35/100 மார்க்.
ஏன்டா அலை வேகமா வருதுங்கற இந்த நேரத்துல வேற ஒருத்தன காப்பாத்த போய் என் உசுர(!) விடவா?முதல்ல நான் தலைதெறிக்க ஓடுவேன்டா என்ன காப்பாத்திக்கனு மட்டும் சொல்லிட்டா அதுக்கு சந்தேகமே வேண்டாம் மனுஷன போலவே யோசிக்கிற அந்த ரோபோக்கு 100/100 மார்க் போட்டுட்டலாம்!

ஆனா‌ காப்பாத்தனும்னு வந்துட்டா 2பேர்ல ஒருத்தன ஏன் காப்பாத்தனும்னு Reasoning சொல்ல வேண்டியிருக்கு.
காப்பாத்த போறப்போ வர திடீர்  பிரச்சனைகளை உடனே யோசிச்சு தீர்த்து நொடி நேரத்துல ஒரு முடிவெடுத்து செயல்பட problem solving skills தேவைப்படுது.
ஒரு விஷயத்தை எப்படி செய்யப்போறோம்ங்கற Pre planning தெரிய வேண்டியிருக்கு.

Learning மூலமாக ஒரு மனிதனால Reasoning,PS, planningனு  மற்ற மூன்றையும் அடைஞ்சுட முடியும்னா ரோபோவாலயும் அது முடியும்னு விஞ்ஞானிகள் நம்புறாங்க...

இப்போ ரெண்டாவது டைப் படி ரோபோவுக்கு குழந்தைக்கு சொல்லி தர போல ஒவ்வொன்னா சொல்லிக்கொடுக்கலாம்னா அது அதவிட ரொம்ப கஷ்டமானதா இருக்கு.

ஒரு குழந்தை குப்புற படுத்து, மண்டியிட்டு, தவழ்ந்து எழ முயற்சித்து விழுந்து மீண்டும் எழுந்து நின்று நடந்துனு ஒவ்வொன்றையும் படிப்படியா கத்துக்குது.
அது போல ஒரு ரோபோவை பழக்குவது.
தப்பு பண்ணி அதை திரும்ப பண்ணாம திருத்திக்கிட்டு(கத்துக்கிட்டு) அதை திரும்ப பண்ணி இப்படி ஒவ்வொன்னா கத்துக்கறது.
அஃதாவது trial,error,learn and repeatங்கற முறைப்படி...
ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட்‌‌ மனிதனை விட சில இடங்களில் துல்லியமா செயலாற்றுது.
உதாரணத்துக்கு QUALITY INSPECTION.
ஒரு பொருளுடைய டைமன்ஷனை check பண்ண சொன்னா மனுஷன் ஒரு Vernier caliperஐ தூக்கிக்கிட்டு மணிக்கணக்குல அளந்து 0.02mm least countஓட ஒரு பதிலை அளிப்பான்.அது எக்ஸாக்ட்டா கூட இருக்காது.
ஆனா‌ ஒரு ரோபோ சென்சார் மூலம் அதை ஸ்கேன் பண்ணி 1நிமிஷத்துல துல்லியமான ஒரு பதிலை தத்துடும்.
ஒரு சாதா ரோபோவுக்கும் AI ரோபோவுக்கும் உள்ள வித்தியாசம் அது தான்.
ஒரு AI ரோபோவானது எந்த சென்சாரும்‌ இல்லாம தன் சுய அறிவால அஃதாவது தன் CPUவால் மட்டுமே புரியனும் அது பாஷைல  சொன்னா கணக்கிடனும்...
நெருப்பு சுடும்னு நமக்கு தெரியும் பாத்தாலே அது அனல் வீசும் போல இருக்கு கைய வெச்சா சுடும்னு சொல்லிடுறோம்.
ஆனா ரோபோவானது ஒரு thermal sensorகொண்டு போய் அதுல வெச்சு செக் பண்ணிக்கிட்டு அப்பரமா அது சுடும்னு சொல்ல வேண்டி இருக்கு.
Thermal vision viewல கூட அங்க சூடான பொருள் இருக்குனு தெரியுமே தவிர அது தொட்டா சுடும்னு தெரியாது.
Optical character recognition - ஒருத்தர பாத்தே ஆணா பெண்ணானு சொல்றது மட்டுமில்ல சிவகார்த்திகேயன் ரெமோ வேசத்துல வந்து நின்னாலும் கீர்த்தி சுரேஷ் போல பாத்து நர்ஸுனு நினைச்சு ஏமாந்துட கூடாது‌. பாத்ததும் யாருடா தம்பி நீ fancy dress competitionக்கு பொண்ணு வேஷம் போட்டு வந்துருக்கியானு கேக்கனும்‌.
நாஞ்சில் விஜயன பொண்ணுனு நினைச்சு இரும்பிலே ஒரு இருதயம்னு பாடிட்டு ரொமான்ஸ் பண்ணினா அந்த ரோபோ ஃபெயில் ஃபெயில் ஃபெயில் தான்.
அதையும் தாண்டி அன்னிக்கு ஆள பாத்தப்பவே நினைச்சேன் இவன் அப்படிப்பட்ட ஆளா தான் இருப்பான்னு என்பது மாதிரி பக்கத்து வீட்டு செல்வி ஆண்ட்டி போல பார்த்த மாத்திரத்துல ஒருத்தரோட கேரக்டர் பத்தி கணக்கிட்டு பொறனி பேசத்தெரியனும்.
அதெல்லாம் வெறும் சென்சார்களால செய்ய மட்டும் முடியாது.

அதுபோல ஒரு ரோபோ தானா ஒரு விஷயத்தை கத்துக்க ரொம்பவே சிரமப்படும்‌.
1+1= என்னனு கேட்டா சொல்லிடும்.ஆனா 1 ஆப்பிள் + 1ஆரஞ்சு = எத்தனை திராட்சைனு கேட்டா திருதிருனு முழிக்கும்.
வீட்டு ஹால் நடுவுல ஒரு டேபிள் இருந்தா அதை விலகி நடக்கனும்னு தெரியாது.
இடிச்சு அப்புறம் ஒரு அடி நகர்ந்து திரும்ப இடிச்சு ஒரு அடி நகர்ந்து திரும்ப இடிச்சுனு கேக்கும் போதே கடுப்பாகுதுல்ல?
ஒரு வாத்தியாராக இருந்து ஒரு குழந்தைக்கு 1+1=2ங்கறத 508வது முறையா சொல்லிக்கொடுப்பது பத்தி யோசிச்சு பாருங்க..
அப்படி தான் விஞ்ஞானிகள் காண்டானாங்க..
இது தான் ஒரு AI ROBOல இருக்கற பிரச்சனை.

இது எல்லாத்தையும் மீறி ஒரு AI ROBOவை மனிதன் படைத்து விட்டால் என்னவெல்லாம் நடக்குமோங்கற பயமும் இல்லாமல் இல்லை.
மனிதனை போல சிந்திக்கும் ரோபோ மனிதன் சந்திக்கும் உளவியல் பிரச்சனைகளையும் நிச்சயம் சேர்த்தே சந்திக்கும்.
கோபம் காதல் விரக்தி பயம் என மில்லியன் காலமாக மனிதன் சமாளிக்க கற்று பரிணாமித்து வந்த விஷயங்களை எப்படி எதிர்கொள்ளுறதுனு தெரியாம ரோபோக்கள் மெனக்கெட்டு மண்டய பிச்சுக்கும்.
(மோட்டார பிச்சுக்கும்னு வெச்சுக்கங்களேன்)
விரக்தியடைந்த ரோபோக்கள் சூசைட் பண்ணிக்கிட்டா கூட பரவாயில்ல.. ஒரு வேளை sadistகளாக மாறிட்டா இந்த சமூகத்தையும் எதிர்காலத்தையும் அதுகிட்டருந்து காப்பாத்துறது போதாத காரியமாகிப்போகும்.
மனிதனை விட சில விஷயங்கள்ல தகுதி குறைவான ரோபோ மனிதனுக்கு இணையாகனும்னு யோசிச்சா என்னவாகும்!?
முடியாத பட்சத்துல அதோட அடுத்த இலக்கு என்னவாயிருக்கும்!?
காதல் தோல்வியடைஞ்ச ரோபோவை எது அதிகம் பாதிக்கும்??
காதல் தோல்வியா இல்லை காதல் தோல்வியடைந்த மனிதர்களை போல தண்ணியடிச்சு தாடி வளர்த்துக்க முடியலயேங்கற inferiority complexசா?
புறம் அழிஞ்சாலும்  இன்ட்டெர்நெட் மூலமா வேற ஒரு ரோபோட்டிக் உடலுக்குள்ளயோ குறைந்தது  ஒரு பென்டிரைவ் உள்ளயோ தன்‌ ஆன்மாவை நொடியில இந்தியாவுலருந்து இங்கிலாந்துக்கு இடம் மாற்றி  பாதுகாத்து வைத்துக்குற திறமையுள்ள ரோபோ மனித இனத்தை எத்தனை அச்சமுறச் செய்யுறதா இருக்கும்? Just இங்க ஒரு upload and அங்க ஒரு download and install அவ்வளவு தான்,நொடியில செத்து பிழைச்சுடலாம்.
இத்தனை இத்தனை பயங்கரமான ஒரு சக்தி மனித இனம் மேல ஒரு கோபம் கொண்டா எனவாகும்!?
யோசிச்சாலே பயமா இருக்குல்ல? அப்படி மட்டும் நடந்தா?
அப்படி ஒரு நிலமை ஏற்பட்டா அதைத் தடுக்க வசீகரனாலயும் முடியாது எந்த சிட்டியாலயும் முடியாது!

No comments:

Post a Comment