Sep 26, 2018

ஆதார் - உச்சநீதிமன்றத் தீர்ப்பு

ஆதார் இனிமேல் எங்கு தேவை ?
எங்கு தேவையில்லை?

-உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

1)எந்த ஒரு தனியார் நிறுவனமும்
ஆதார் விவரங்களைக்
கேட்கக்கூடாது.

2)தனியார் நிறுவனங்களுக்கு
தகவல்களை தர அனுமதி தரும் ஆதார்
சட்டத்தின் 57வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

3)மொபைல் போன் நிறுவனங்களுக்கு
ஆதார் எண் தர வேண்டிய
அவசியமில்லை.

4)வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.

5)வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண்
வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

6)பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு
ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது.

7)வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்.

8)பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்.

9)அரசு மானியம்,உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார்
எண்ணைக் காட்டி அதனைத் தடுக்க முடியாது.

10)அரசு சேவைகளைப் பெற ஆதார் அவசியம். தேச பாதுகாப்பிற்கு மட்டுமே ஆதாரைப் பயன்படுத்த வேண்டும். தனிநபரின் தகவல்களை பாதுகாக்க
வேண்டியது அரசின் கடமை.

Sep 25, 2018

ISRO போட்டிகள்

இஸ்ரோ பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி :

உலக விண்வெளி வார விழா கட்டுரை போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

உலக விண்வெளி வார விழாவையொட்டி பள்ளி, ஐடிஐ மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாக மேலாளர் ஏ. நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பில் வரும் அக். 4 முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வார விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி,   "விண்வெளிச் சுற்றுலா' என்ற தலைப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், "வேற்று கிரகத்தில் ஒன்றுபட்ட குடியிருப்பு' என்ற தலைப்பி 10ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.
கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். ஏ 4 அளவுள்ள வெள்ளை தாளில் 2000 வார்த்தைகளுக்கு மிகக்கூடாது.  ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தல் அவசியம்.
 இவ்விரு போட்டிகளிலும் பங்கேற்க விரும்பும் மாணவர்கள்   பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும்.  தலைமையாசிரியர் ஒப்புதல் சான்று தேவை. கட்டுரையை வரும் அக். 1ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும்,  மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு அதே தலைப்புகளில் தமிழ், ஆங்கில பேச்சுப்போட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் அக்.4இல் காலை 10 மணிக்கு நடைபெறும். நேரம் 5 நிமிடங்கள் மட்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவில் 2 மாணவர்கள் வீதம் 4 பிரிவுகளில் 8 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
ராக்கெட் ஏவுதல்:  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்களுக்கு தண்ணீர் ராக்கெட் ஏவுதல் போட்டி  திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அக். 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. ஒரு கல்லூரிக்கு இருவர் வீதம் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இவ்விரு போட்டிகளுக்கும் அக். 3 ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும்.   தமிழ் ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் 3 பரிசுகள் வழங்கப்படும்.  வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்படும்.
கட்டுரைகளை அனுப்பவும், பேச்சு மற்றும் ராக்கெட் ஏவுதல் போட்டிக்கு பெயர் பதிவு செய்வதற்குமான முகவரி:
நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி-627 133, திருநெல்வேலி மாவட்டம்.  மேலும் விவரங்களை  04637 281210,  94421 40183,  ஆகிய தொலைத்தொடர்பு எண்கள் மூலம் அறியலாம்.

Sep 21, 2018

விண்வெளி - சிந்தனைத் திறனறிதல் போட்டி

United Nations
(ஐக்கிய நாடுகள் சபை)
அக்டோபர் 4 முதல் 10 வரை
World Space Week ஆக அறிவித்துள்ளது.
அதனை ஒட்டி
Open Space Foundation என்ற தனியார் அமைப்பு மாணவர்களுக்கு விண்வெளி சிந்தனைத் திறனறிதல் போட்டியை நடத்த உள்ளது.
இதில் நமது பள்ளியில் பயிலும் 10 மாணவர்கள் முதல் 100 மாணவர்கள் வரை (நான்காம் வகுப்பு முதல்)கலந்து கொள்ளலாம்.
வினாக்கள் Mail மூலம் அனுப்பப்படும்.நமது பள்ளி விரும்பும் நாளில் (அக் 4 முதல் 10 க்குள்) போட்டியை நடத்திக்கொள்ளலாம். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் தபால் மூலம் சான்றிதழ் அனுப்பப்படும்.கட்டணம் ஒரு பள்ளிக்கு ரூ 200.
விருப்பம் உள்ள பள்ளிகள் தொடர்பு கொள்ளவும்.

Sep 7, 2018

Society -அமைப்பு- விதிகள் - செயல்பாடு

சொசைட்டி பற்றிய தகவல்கள்.
ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்:

கூட்டுறவு சங்கம் அமைப்பு:

 உறுப்பினர்கள் பேரவை:

கூட்டுறவு தத்துவத்தின்படி உறுப்பினர்களின் பேரவையானது சங்கத்தின் ஒர் உயர்ந்த நிலை அமைப்பாகும்.


ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைவதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஒருமுறையாவது பேரவை கூடி கீழ்க்கண்டுள்ள பொருட்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

ஆண்டு வரவு,செலவு திட்டம் ஒப்புதல் செய்தல்.

தணிக்கை அறிக்கை மற்றும் ஆண்டறிக்கையும் வாசித்து அங்கீகரித்தல்.

நிகர லாபப் பங்கீட்டினை அங்கீகரித்தல்.

சங்கத்தின் செயல்திட்டத்தை மதிப்பிடுதல்.

முந்தைய ஆண்டில் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் சேவைகளை கலந்துரையாடல்.

புதிய துணைவிதிகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது ஏற்கனவே உள்ள துணை விதிகளுக்கு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல்.

தகுதியற்ற உறுப்பினரை விலக்குவது பற்றி முடிவெடுத்தல்.
(கடன் பெற்று மூன்று மாதம் திருப்பி கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்கள்)

சங்கப் பேரவை நிர்வாகக் குழுவால் கூட்டப்படவேண்டும்.

சங்க பேரவையை சங்க அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைமையிடத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வசதியான இடத்தில் கூட்ட வேண்டும்.

உறுப்பினர்களுக்கு துணை விதிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பேரவைக் கூட்ட, முன் அறிவிப்பு அனுப்ப வேண்டும்.


நிர்வாகக் குழு:

ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகம் உறுப்பினர்களால் சட்டம் விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவர் தலைவராகவும் இன்னொருவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

நிர்வாகக் குழு கூட்டம்
நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு குறையாமல் முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும்.

இக்கூட்டத்தை சங்கத்தின் செயல் எல்லையில் எங்கு வேண்டுமானாலும் கூட்டலாம்.

செயலாளர்,தலைவருடன் அல்லது அவர் இல்லாத நேர்வில் துணைத்தலைவருடன் கலந்து,நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

மேலாண்மை இயக்குநர் இல்லாதபோது தலைவர் நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டும்.

மூன்று மாதங்களுக்குள் குறைந்தது ஒரு முறையாவது நிர்வாகக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

தலைவர் துணைத் தலைவர் தலைவர் பேரவைக் கூட்டத்தையும், நிர்வாகக்குழு கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவேண்டும்.

சங்க துணை விதியில் குறிப்பிட்டுள்ளபடி சங்க நிர்வாகத்தை தலைவர் நடத்த வேண்டும்.

தலைவர் பதவி காலியாக உள்ளபோது, தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் துணைத் தலைவர் செயல்படுத்தலாம்.

கூட்டுறவு சங்கம் பார்வை


Society Act-1983
Society Law-1988
ஒரு பார்வை...

கூட்டுறவு இயக்கத்தை முறையான வளர்ச்சி அடையச் செய்வதே கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கம்.

ஒவ்வொரு சங்கத்திலும் சட்டம் மற்றும் விதிப் புத்தகங்கள் கட்டடாயம் வைத்திருக்க வேண்டும்.

கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு உட்பட்டுத்தான் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் இருத்தல் வேண்டும்.

சட்ட விதிகள்:

பிரிவு - 9 :
கூட்டுறவுச் சங்கத்தை பதிவு செய்தல் (120 நாட்கள்).
குறைந்தபட்சம் 25 உறுப்பினர்கள்.

பிரிவு - 1 விதி -9 :
பொதுவாக துணை விதித் திருத்தம் செய்தல் (120 நாட்கள்).
தேவைப்படும் போது DRO விடம் உறுப்பினர்கள் இணைந்து மாற்றலாம்.
உறுப்பினருக்கு நிர்வாக குழுவை மதிப்பிட உரிமை உள்ளது.


பிரிவு - 80:
தணிக்கை முடித்தல் (6 மாதங்கள்).

தேவையில்லாமல் காலம் கடத்திய பின் Audit பிரச்சனை என  கூறக்கூடாது.

பிரிவு - 81:
விசாரணை முடித்தல் (3 மாதங்கள்).

தணிக்கை மீதும் , நிர்வாகம் மீதும் மேல்முறையீடு சார்பு.

பிரிவு - 87:
தண்டத்தீர்வை நடவடிக்கை முடித்தல் (6 மாதங்கள்).

நிர்வாக முறைகேடு கண்டறியப்பட்டால்.

பிரிவு - 88:
நிர்வாகக் குழுவை கலைக்க ஆணையிடுதல் (2 மாதங்கள்).

சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்.

பிரிவு - 88:
நிர்வாக குழு கலைப்பு காலம் (6 மாதங்களுக்கு மிகாமல்).

சங்க உறுப்பினர்கள் புகார் அடிப்படையில்.

பிரிவு - 89:
சில சூழ்நிலைகளில் தனி அலுவலர் நியமனம் (6 மாதங்களுக்கு மிகாமல்).

நிர்வாக குழு கலைக்கப்பட்டால்...
தேர்தல் கட்டுப்பாடு நடைமுறையில் கூட ...
உறுப்பினர் நலன் கருதி தனி அலுவலர் மூலமாக தாராளமாக (டிவிடண்ட்) பங்குத்தொகை வழங்கலாம்.

தேர்தல் காரணம் என  சொல்லக் கூடாது.

பிரிவு - 36:
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தகுதியின்மை மற்றும் நீக்குதல்.

பிரிவு - 72 விதி 94:
நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்.

இலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள்...
நிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் அதிக அளவு மாத மதிப்பூதியம்.

( உதாரணம்: தலைவர்/செயலாளர் - ரூ.1200 & இதர இயக்குநர்கள் - ரூ.2400 )

முடிந்தால் ஆண்டறிக்கை நிர்வாக குழு பிரிண்ட் எடுத்து தர வேண்டும் தவறு ஒன்றும் இல்லை.

மாத ஆரம்ப இருப்பு தொகை ,வரவு , மாத முடிவு தொகை & TDS தொகை... கூட்டம் கூட்டிய எண்ணிக்கை , கூட்டத்திற்கான டீ மிக்சர் செலவு ஆடிட் பண்ணுவதற்கான தொகை என ஒன்று விடாமல் நிர்வாகக் குழு பிரிண்ட் தந்தால் நிர்வாகத்தில் எவ்வித குழப்பமும் இல்லை என அறிந்து கொள்ளலாம்.

இதில் ஆயுள் காப்பீடு என்று கொண்டுவந்தால் அதற்கான பாண்டை சார்ந்த ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.அந்த நிறுவனத்தின் பெயர் தெரிவிக்க வேண்டும்.
ஏனென்றால் அதையும் வருமான வரிக்கு உதவும்


மேலும் சில விதிமுறைகள்:

1. நாம் பெறும் கடன் தொகையில் 10% வைப்பு தொகையாக பிடித்தம் செய்து மீதம் வழங்கப்படும்.

2. மாதம் சிக்கன சேமிப்பு தொகை இடவேண்டும் குறைந்த பட்சம்₹500 முதல்

3 நாம் வைத்திருக்கும் வைப்புதொகைக்கு 14% வட்டியும்,சேமிப்பு தொகைக்கு 8 & 8.5% வட்டியும்  கூட்டுறவு சங்க வழங்க வேண்டும்.

4. இந்த கணக்கீடு ஒவ்வொரு வருடமும் தணிக்கை முடித்து, 1.ஏப்ரல் முதல் அடுத்த வருடம் 31மார்ச் வரை இலாபத்தொகை (Dividend) பங்கீட்டு வழங்க வேண்டும்.

எம் கனவு


Sep 4, 2018

திரு.உதயச்சந்திரன் இஆப அவர்களின் ஆசிரியர்தின வாழ்த்து

அன்புடையீர்


ஆசிரியர்களின் பேரிலக்கணமாம் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் ஐந்தாம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும்
இந்நன்னாளில் தங்களின் அன்பை விழைகின்றேன்.

வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிக்காது ஒழுக்கம், பண்பு,
ஆன்மிகம்,பொது அறிவு, ஆற்றல் மேம்பாடு, திறமை வளர்த்தல், தன்னம்பிக்கை, வாழ்வியல்
என பன்முகத் திறன்களை பகுத்துக்கூறி சிறந்த குடிமகனாக்கும் உன்னதமானதோர்
தெய்வீகப் பணியே ஆசிரியப்பணியாகும்.

மாணவ சமூகத்தின் மத்தியில் குறிக்கோள், இலட்சியம் எதிர்காலம்
இவற்றை நன்கு பதிய வைத்து அவர்களின் சீரிய வழிகாட்டியே ஆசான். ஒருதேசத்தின் எதிர்காலத்தை தாங்கவிருக்கும் துாண்களுக்கு வைரம் பாய்ச்சுவரே நீர்.மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மனித சமூகத்தின் முதுகெலும்பாக
விளங்குபவரே ஆசிரியர்.

மனித சமுதாயச் சிற்பிகளே.தங்களை இந்த நல்லதோர் தருணத்தில்
நினைவு கூர்ந்து வணங்கி வாழ்த்துகிறேன்.

ஆசிரியர்களுக்கான உடல்நலக் குறிப்புகள்

ஆசிரியர்கள் நலனுக்கான முக்கியக் குறிப்புகள்:

1.வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).

2.ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை  சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து, எளிதில் நோயுற வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.
( Keeping a check on your weight ).

3.தொடர்ந்து ஒரேயிடத்தில்  நிற்பதினாலோ  அல்லது உட்கார்ந்து இருப்பதினாலோ ஏற்படும்  கழுத்து வலி,முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சி களை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் (neck and pack pain)தவிர்க்க லாம்.

4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.கைகால்களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)

5.நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால்,கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும்.தொண்டை வலி தொண்டைப்புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும்.இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்(take a sip of water frequently)

6.தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களைத் தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will  avoid voice related problems).

7.ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள்  புத்துணர்ச்சியுடன் இருப்பதை அவர்கள் உணர்வார்கள்.(Getting sleep for eight hours so as to fresh for next day).

8.ஆசிரியர்கள் தங்களது கால்களுக்கு  ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை,ஷூக்களை (Comfortable chappals /shoes)அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.

- இந்த பதிவு ஒரு  ஆங்கில செய்தித்தாளில் வந்த "Appreciating Mentors: Teachers,it is important to take care of yourselves"என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.

Sep 3, 2018

MINI PROJECTOR

I taught my students using Micro LED Projector.It's a mobile phone size projector.
There is enough video clarity and sound available for a class.It's easy to move from one place to another and easy to handle.Pen drive,SD card,USB,HDMI connecting facility available.It is available online at just Rs 3000.This is very useful to me and one of my favourite teaching tools.
Link:
https://m.banggood.in/YG-300-LCD-Mini-Support-1080P-Portable-LED-Projector-Home-Cinema-p-1052155.html?utm_source=youtube&utm_medium=cussku&utm_campaign=7639798_1052155&utm_content=1061
For More information
            https://youtu.be/32nMGlSUXmQ


Note:
The projector works perfectly in a dark room.
If you'd like to buy this, 
please see the user's reviews.
By
S Saravanan
Municipal Middle School,
Mettupalayam,
Tirupur north,
Tirupur.