Oct 1, 2018

CAPITONYMS

March என்பதற்கும் march என்பதற்கும் என்ன வேறுபாடு?

இரண்டும் ஒன்று போல தோன்றலாம்.ஆனால் ஒன்றல்ல.வேறு.

ஆம்.சில ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்தை CAPlTAL letter இல் எழுதும் போதும் small letter இல் எழுதும் போதும் வேறு வேறு பொருள் தருகின்றன என்பது ஆச்சரியமூட்டும் உண்மை.

அதாவது முதல் எழுத்தை Capital letter ஆக மாற்றிவிட்டால் வார்த்தையின் பொருள் மாறி விடுகிறது.
சில இடங்களில் உச்சரிப்பு
கூட மாறி விடுகிறது.

எனவே சொல்லின் பொருளுக்கும், உச்சரிப்பிற்கும் ஏற்ப Capital letter அல்லது small letter பயன்படுத்த வேண்டியதாகிறது.

இதனை ஆங்கிலத்தில் Capitonyms என்கிறோம்.

இங்கு March என்பது மாதத்தையும் march என்பது அணிநடையையும் குறிக்கிறது!


இத்தகைய  சொற்களைக் கண்டறிந்து,பட்டியலிட்டு வைத்துக் கொள்ளலாம்.

இவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் போது ஆங்கிலம் கற்பித்தல் ஆர்வமூட்டுவதாக அமையும்.

சில உதாரணங்கள்👇