Dec 31, 2019

2019 இன் நினைவுகள் 50









2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயல்பாடுகளில் எம் நினைவில் இடறும் சிறந்த 50 செயல்பாடுகளின் பட்டியல் :


1)CODISSIA வில் நடைபெற்ற Coimbatore Science and Technology Festival இல் எமது மாணவர்கள் மூவர் தேர்வு செய்யப்பட்டு தமது படைப்பை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்-6/1/19

2)Telescope மூலம் வானத்தை உற்று நோக்கும் Skywatch Program OSF சார்பில் பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.திரளான பார்வையாளர்கள் வானத்தை உற்றுநோக்கி வானியலைக் கற்றனர் -12/1/19

3)பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு பதில் சில்வர் வாட்டர் பாட்டிலை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கினர் -21/1/19

4)திருப்பூர் புத்தகத் திருவிழாவில் எமது மாணவியர் இருவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன-5/2/19

5)VVM Observer ஆக பணியாற்றியமைக்காக VIBHA சார்பில் சான்று வழங்கப்பட்டது - 5/2/19

6)சிறுகச் சிறுக சேமித்த எமது மாணவர்கள் திருப்பூர் புத்தகத் திருவிழாவிற்கு பள்ளி மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு,சுமார் 5000/ ரூபாய்க்கு புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கினர்-6/2/19

7)ஆனந்த விகடனில் "முன்மாதிரி அரசுப் பள்ளி" எனும் சிறப்புக் கட்டுரை வெளியானது -23/2/19

8)மண்டல அறிவியல் மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்விற்கு எமது மாணவர்கள் மூவர் தேர்வு செய்யப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டு வானியலை நேரடியாகக் கற்றனர்-28/2/19

9)எமது மாணவியின் Coin Vending Machine கூகுள் நிறுவனத்தால் சிறந்த கண்டுபிடிப்பாகத் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது-29/2/19

10)Plickers எனும் Online மதிப்பிடும் முறையில் மாணவர்கள் மதிப்பிடப்பட்டனர் -2/3/19

11)மாவட்ட அளவிலான துளிர் Tallent Test இல் எமது மாணவர் முதலிடம் பெற்றார் -11/3/19

12)"பூங்காற்று" எனும் பெயரில் எமது மாணவர்களே மாத இதழ் வெளியிட ஆரம்பித்தனர்-12/3/19

13)FSSAI எனும் மத்திய உணவுப்பாதுகாப்புத் துறையின் Health and Wellness Co-ordinator அங்கீகாரம் கிடைத்தது-18/3/19

14)வாக்களிக்கப் பணம் பெறக்கூடாது எனும்  எமது மாணவர்களின் "வாக்கு விற்பனைக்கு அல்ல" செயல் திட்டம் வெற்றிகரமாகத் தொடங்கியது-23/3/19

15)ஒரு கல்லில் இரு மாங்காயாக ஒரே நாளில் எமது மாணவர் மூவர் "பசுமைப் பாதுகாவலர் விருதும்" ஐவர் "இளம் விஞ்ஞானி"விருதும் பெற்றனர் -28/3/19

16)PSLV C-45 இராக்கெட் ஏவுதலை மாணவர்கள் நேரடி ஒளிபரப்பாக முதன் முதலில் கண்டு வியந்தனர் -1/4/19

17)கோடைகாலத்தில் பறவைகளின் தாகம் தீர்க்க மொட்டை மாடிகளில் நீரும் தானியங்களும் வைக்கும் செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது -9/4/19

18)NMMS தேர்வில் எமது மாணவர் இருவர் வெற்றி பெற்று தொடர் கல்வி உதவித் தொகைக்குத் தகுதி பெற்றனர் -20/4/19

19)Azim Premji Foundation அமைப்பிடம்
"Creating a thirst for reading among the students..." எனும் செயல்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்புடைமை பெற்றது -8/5/19

20)கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பு "நம்பிக்கை 2019" விருது வழங்கி கெளரவித்தது-12/5/19

21)Tamilnadu Digital Team அமைப்பு"ஒளிரும் ஆசிரியர் விருது" வழங்கி கெளரவித்தது-5/7/19

22)தினமலர் நாளிதழில் "திருப்பூரில் குட்டி இஸ்ரோ'' என்ற பள்ளி குறித்த சிறப்புக்கட்டுரை வெளியானது -7/7/19

23)இந்து நாளிதழில் "அறிவியல் தொழில்நுட்பத்தில் அசத்தும் மாநகராட்சிப் பள்ளி" எனும் சிறப்புக்கட்டுரை வெளியிடப்பட்டது -9/7/19


24)சிந்தனைத் திறனறிதல் போட்டியில் வென்ற 4 மாணவர்கள் சந்திரயான் 2 ஏவுதலை நேரடியாகக் காண இஸ்ரோ அழைத்துச் செல்லப்பட்டனர்-15/7/19

25)சந்திரயான் 2 ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டதால் மீண்டும் மாணவர்கள் நால்வர் இஸ்ரோ அழைத்துச் செல்லப்பட்டனர் -22/7/19

26)அறிவுச் சுரங்கமான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் - 23/7/19

27)தேசியக் கொடியினுள் தாவர விதைகள் வைக்கப்பட்டு "முளைக்கும் தேசியம்" செயல் திட்டம் தொடங்கப்பட்டது -15/8/19

28)Space Quiz இல் வெற்றி பெற்றமைக்காக Mygov & ISRO சான்றிதழ்கள் வழங்கப்பட்டன -18/8/19

29)மாணவர் நேர்மையை ஊக்குவிக்கும் வகையில் "நேர்மைக்கடை" திறக்கப்பட்டது - 27/8/19

30)"புதிய தலைமுறை ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது -31/8/19

31)OSF-INTERNATIONAL ASTRONOMICAL UNION(IAU)-அமைப்பின் Under One Moon-செயல்திட்டத்தில் எமது மாணவர் 30 பேரின் படைப்புகள் IAU இணையதளத்தில் வெளியிடப்பட்டன -15/9/19

32)OMR Sheet மூலம் எமது மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர் -18/9/19

33)Virtual Reality Show (VR) மற்றும் Augmented Reality Show (AR)ஆகியன ஆரம்பிக்கப்பட்டன - 20/9/19

34)KPR கல்லூரியில் நடைபெற்ற Annular Solar Eclipse நிகழ்வில் எமது மாணவர் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர் - 28/9/19

35)தமிழக வனத்துறை சார்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் எமது மாணவன் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார் - 4/10/19

36)Sri Aurobindo Society and HDFC Parivartan's ZIIE இன் Teacher Innovative Award கிடைத்தது - 5/10/19

37)OSF இன் Fellowship க்காக மாணவர்களுடன் கலந்துரையாட டெல்லியில் இருந்து  ChangeLooms அமைப்பினர் பள்ளிக்கு வருகை புரிந்தனர் -7/10/19

38)STEM Project இல் வெற்றி பெற்றதற்காக OSF அமைப்பின் முதலாவது Open Science Centre பள்ளியில் தொடங்கப்பட்டது - 19/10/19

39)Screen Magnification தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் படக்காட்சிகளைக் காண ஆரம்பித்தனர்-22/10/19

40)இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டதற்காக Central Vigilance Commission சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது -31/10/19

41)தொடுதிரை கல்வி முறையின் சாதகபாதகங்கள் குறித்த பள்ளியின் பார்வை கட்டுரை தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டது3/11/19

42)OSF இன் OSC க்காக தொலைநோக்கி பள்ளிக்கு பரிசாகக் கிடைத்தது7/11/19

43)ISRO தலைவர் திரு.சிவன் அவர்கள் எமது 4 மாணவர்களுக்கு கடிதம் அனுப்பினார் -10/11/19

44)Telescope தொழில்நுட்பம்,பொருத்தும் மற்றும் கையாளும் முறைகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது -23/11/19

45)OSC செயல்பாடுகளுக்காக மாணவர்களுக்கு  Activity Log Book வழங்கப்பட்டது - 23/11/19

46)மத்திய அரசு நிறுவனங்களான Vijnan Bharati,Vijian Prasar மற்றும் NCERT இணைந்து நடத்திய VVM-Online தேர்வை எமது மாணவர்கள் எழுதினர் - 24/11/19

47)PSLV C47 Launch காண 5 மாணவர்கள் ISRO அழைத்துச் செல்லப்பட்டனர் -27/11/19

48)தினமலர் சார்பில் "லட்சிய ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது -20/12/19

49)Solar Filters மூலமாக எமது மாணவர்கள் நேரடியாக சூரியனை உற்றுநோக்கினர் -26/12/19

50)பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையதள செய்திகளில் பள்ளியின் சிறந்த செயல்பாடுகள் குறித்த கட்டுரைகள் ஆண்டு முழுதும் தொடர்ந்து வெளிவந்தன.

மொத்தத்தில் இந்த 2019 ஆம் ஆண்டு மிகச் சிறந்த,புதுமைகள் நிறைந்த,மாணவர்களின் சுய சிந்தனைக்கு வாய்ப்பளித்த
ஆண்டாகவே அமைந்தது.

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று இருந்துவிடாமல்,இவற்றைவிட சிறந்த செயல்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வத்துடன் 2020 ஆம் ஆண்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்
👍🙏