Feb 16, 2020

OSC & STEM Award Ceremony.













இப்போதெல்லாம் Open Space Foundation இன் OSC(Open Science Centre) நிகழ்வு  என்றாலே மாணவர்கள் குதூகலமடைவது வாடிக்கையாகிவிட்டது.அந்த வகையில் இன்றைய OSC நிகழ்வும் அமைந்தது.ஞாயிறு என்றும் பாராமல் அனைத்து OSC மாணவர்களுமே வந்திருந்தது சிறப்பு!

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதுடெல்லி PRAVA FOUNDATION இன் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டார்.இந்நிகழ்விற்காகவே டெல்லியிலிருந்து இவர் வந்திருந்தது மற்றுமொரு சிறப்பு.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்கள்,கல்லூரி விரிவுரையாளர்கள்,
முதல்வர்கள்,வழக்குரைஞர்கள்,கல்வியாளர்கள்,
கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

OSF இன் நிறுவனர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் இணைந்து நிகழ்வு ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

OSF சார்பில் எமது பள்ளியின் OSC க்கு Smart TV நன்கொடையாக வழங்கப்பட்டது.


முதல் அமர்வு:

முதல் அமர்வில் திரு.தினேஷ் அவர்களின் வானியல் தொடர்பான ஓரிகாமி மற்றும் மாணவர்களுடனான கலந்துரையாடலை மாணவர்கள் மிகவும் இரசித்தனர்.
புதுமைகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர்.
காகித செயற்கைக்கோள்கள் வகுப்பறை முழுவதும் நிரம்பின.ஆங்காங்கே பறக்கவும் ஆரம்பித்தன.

இரண்டாம் அமர்வு:

இரண்டாம் அமர்வில் திரு.சுரேந்தர் அவர்களின் Modern Astronomy வகுப்பு மாணவர்களைக் கட்டிப்போட்டது. வானியல் குறித்த அரும்பெரும் தகவல்களை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
இவ்வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாய் அமைந்திருந்தது.வானியலை செயல்வழியே மாணவர்கள் அனுபவித்துக் கற்றனர்.

STEM Network & Award Ceremony:

மதியம் STEM Teachers Network Inauguration மற்றும் STEM Track 2019 இல் வெற்றி பெற்ற பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Open Space Foundation மற்றும் United Nation இன் Space Generation Advisory council சார்பில் Out Of Box School மற்றும் Innovative STEM Teacher என இரு பிரிவுகளிலுமே வெற்றியாளர் என்று இரு விருதுகள் எமது பள்ளிக்கும்,எமக்கும் வழங்கப்பட்டன.

STEM Network குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.STEM Network குறித்த தெளிவான புரிதல் அனைவருக்குமே ஏற்பட்டது.

மொத்தத்தில் மாணவர்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் விருந்தினர்களுக்கும் இன்றைய நாள் மிகுந்த பயனுள்ள மற்றும் புதுமையான நாளாக அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை.


நிகழ்வை ஏற்பாடு செய்து மிகச்சிறந்த முறையில் ஒருங்கிணைத்த OSF குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.