Apr 23, 2019

உலக புத்தக தினம்



உலக புத்தக தினம்:


அறிவு வளர்ந்து முதிர முதிர வாய் தன் வேலையைக் குறைத்துக் கொள்ளுமாம்.அந்த வகையில் அறிவை முதிரச் செய்வன புத்தகங்கள். 

ராணிகாமிக்ஸ் கதையில் ஆரம்பித்தது பசுமையாய் நினைவில் இருக்கிறது.மாயாவியின் முகத்தை இறுதி வரை பார்க்க முடியாமல் இருப்பதே பெரும் சுவாரஸ்யம்.அடுத்ததாய் அறிமுகமானவை ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவல்கள்.அவை விவேக்கை ஆதர்ஷ கதாநாயகனாய் வரித்துக் கொண்ட தருணங்கள். இவ்வளவு சுலபமாய் அறிவியலை அறிந்து கொள்ள முடியுமா என பெரும் வியப்பு உண்டாக்கிய நாட்கள் அவை.

அதன் பிறகு வந்தவை நூலகங்களே கதியாய்க் கிடந்த மகிழ்வான நாட்கள். சுஜாதா,பாலகுமாரன், சாண்டில்யன் நாவல்கள் கிடைத்து விட்டால் பெரும் 
பொருட்குவியல் கிடைத்ததாய் மகிழ்ச்சி மேலிடும். அறிவியல் பற்றிய பார்வையையும்,வாசிப்பு அனுபவத்தையும் புரட்டிப் போட்ட சுஜாதா எழுத்துகள்,புதுமுகச் சிந்தனையின் வாசலாக பாலகுமாரன் எழுத்துகள்,வரலாற்றின் வாயில்களை வித்தியாசமாய் திறந்த சாண்டில்யன் எழுத்துகள் என ஆரம்ப கால வாசிப்பு அனுபவம் இனிமையானது.

பல நாழிகைகள்,நடுசாமம் வரை விழித்திருந்து சாண்டில்யனின் வருணனைகளைப் பருகிய சுவாரஸ்ய தருணங்கள்.உடையார் படித்துவிட்டு உடைந்து போனது, ஏன் எதற்கு எப்படி படித்து விட்டு அறிவுப் பசியில் அலைந்தது,பொன்னியின் செல்வனைப் படித்து வந்தியத் தேவனாய் வசித்தது நினைவலைகளில் வந்து வந்து போகின்றது.

அதன் பிறகு அறிமுகமான எழுத்தாளர்களும், எழுத்துகளும்,பார்வையின் கோணங்களை மாற்றினாலும், வித்தியாசமான அனுபவங்களை ஊட்டினாலும் ஆரம்பப்பள்ளி போல ஏக்கத்துடன் நினைவு கூறத் தக்கவை ஆரம்பகால வாசிப்புகளும், வாசிப்பு அனுபவங்களுமே.

அடுத்தவர் அறிவைக் கடன் வாங்கிக் கொண்டே இருக்காமல் குறிப்பிட்ட காலத்தி்ற்குப் பின் வாசிப்பதை நிறுத்திவிட்டு,தானாகச் சிந்திக்க வேண்டும் என ஒரு சாராரும்,சாகும் வரை வாசிப்பை நிறுத்தக், கூடாது என ஒரு சாராரும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

எது சரி என முடிவு எடுக்காமல்
"நீர்வழிப் படூஉம் புனல் போல"ஆற்றோட்டமாய் செல்லத்தான் தோன்றுகிறது.
வாசிப்போம் சுவாசிப்போம்.
உலக புத்தக தின வாழ்த்துகள்.

- சரவணன்

Apr 15, 2019

Contronyms





Can a word be its own opposite?

Yes!There are actually dozens of examples.They are called contronyms—words that are their own antonyms,depending on usage.

Here are a few for starters:

 Dust :
can mean ‘to add fine particles’ or ‘to remove fine particles’.

 Left:
can mean both
‘remaining’ and ‘departed’.

 Off:
can mean both ‘activated’ (as in set off) and ‘deactivated’.

 Oversight:
means both ‘watchful care’ and ‘an inadvertent error’.

 Screen :
 can mean both ‘to show’ and ‘to hide’.

கருந்துளையின் முதல் புகைப்படம் - நாசா






Black Hole என்று விண்வெளி ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

Big Bang theory எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இந்த உலகம் உருவானதாக அறிவியல் கோட்பாடு கூறுகிறது.ஆனால்,அதற்கு முன்பாக இந்த அண்டம் எப்படி உருவாகியிருக்கும் என்று கேட்பவர்களுக்கு,பதிலாக சொல்லப்பட்ட மற்றொரு கோட்பாடு,கருந்துளை எனப்படும் Black Holeல் இருந்து தான் அண்டம் உருவானது என்று. உலகளவில் பிரபல விஞ்ஞானியாக அறியப்பட்ட மறைந்த ஸ்டீஃபன் ஹாக்கிங், கருந்துளை பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். ஆனால்,இவை அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதா?என்று யாராலும் கேட்க முடியாது. ஏனென்றால்,கருந்துளை என்பதே கற்பனையான ஒரு விஷயமாகவே இருந்து வந்தது.

அண்டத்தில் கருந்துளை என்பது இருப்பதாக அறிவியலாளர்கள் கூறினாலும்,அது என்ன வடிவத்தில் இருக்கும் என்று யாராலும் 100% உறுதியாகக் கூற முடியவில்லை. ஏனென்றால்,பால் வீதியில் எத்தனையோ கோடி ஒளி மைல்கள் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களை தொலைநோக்கிகள் மூலம் புகைப்படம் எடுத்து தள்ளிய மனித குலத்திற்கு, கருந்துளையை புகைப்படம் எடுப்பது என்பது சாத்தியமற்ற காரியமாகவே இருந்தது. Black Hole எனப்படும் கருந்துளைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், அதைச் சுற்றியுள்ள சூழலை கண்காணிக்கவும் கடந்த 2012ஆம் ஆண்டு EVENT HORIZON TELESCOPE எனப்படும் தொலைநோக்கித் திட்டத்தை நாசாவுடன் இணைந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று அமைத்தது. ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய கருந்துளை இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.இதன் புவியீர்ப்பு விசை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு மிக சக்தி வாய்ந்தது என்பதால் இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவர முடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டு விடும்.இதன் காரணமாக கருந்துளையை படம்பிடிக்க முடியாமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது.

2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட EVENT HORIZON TELESCOPE திட்டத்தின் கீழ்,ஹவாய், அரிசோனா,ஸ்பெயின், மெக்சிகோ,சிலி உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கி ஈவென்ட் ஹாரிசன் டெலஸ்கோப் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ டெலஸ்கோப்களை பயன்படுத்தி,ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதன் முடிவில் 2 கருந்துளைகளை கண்டு பிடித்துள்ளனர்.இதில் முதல் கருந்துளை ‘சாகிட்டாரிஸ் ஏ’ எனும் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் கருந்துளை எனவும், மற்றொன்று,விர்கோ விண்மீன் மண்டலத்தில் M87 கோள்களுக்கு மையத்தில் இருக்கும் கருந்துளை என்றும் தெரிவித்துள்ளனர்.

கருந்துளையின் புவிஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால்,இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவர முடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டு விடும். அளவில் சிறிதாக இருக்கும் ஒரு கருந்துளை, பெரும் சூரியனை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இதுவரை கற்பனையின் அடிப்படையில் illusion படமாகவே காட்டப்பட்ட கருந்துளையின் உண்மையான வடிவம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால்,இதில் ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால், ஒளியாக இருந்தாலும் கூட கருந்துளைக்கு உள்ளே சென்று விட்டால்,வெளியே வர முடியாது என்று கூறப்பட்ட நிலையில்,அதே ஒளிதான் கருந்துளையை அடையாளம் காட்டியிருக்கிறது. புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ள கருந்துளையை சுற்றியிருக்கும் ஒளிவட்டம், உள்ளே இழுக்கப்படும் வாயு,உச்சபட்ச வெப்பத்தில் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் என்று விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.