நகராட்சி நடுநிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்,
திருப்பூர் வடக்கு,
திருப்பூர் மாவட்டம்.
இஸ்ரோ - OSF சிந்தனைத் திறனறிதல் போட்டியின் வெற்றியாளர் குறித்த செய்திகளின் தொகுப்பு,
இஸ்ரோ பயண அனுபவங்கள்
மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு:
வெற்றியாளர் குறித்த நாளிதழ் செய்திகள்:
The Hindu
New Indian Express
தமிழ் இந்து
தினமலர்
இஸ்ரோ பயண அனுபவங்கள்:
21/11/18 காலை 10 மணியளவில், இஸ்ரோவின் மூன்று கட்ட கடும் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு வெற்றியாளர்களாகிய மாணவர்களுடன் வளாகத்தினுள் நுழைந்தோம்.
இஸ்ரோ தும்பா ஆய்வு மையத்தின் தோற்றம், முதலில் செய்யப்பட்ட சோதனைகள்,முதன் முதலில் சைக்கிள் மூலம் இராக்கெட் பாகங்களை எடுத்துச் சென்ற விதம் ஆகியவற்றை அலுவலர்கள் கூறிய போது மாணவர்கள் மிகுந்த வியப்பிற்கு உள்ளாயினர்.
அடுத்ததாக விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் சோதனைக் கூடம் மாணவர்களை ஆச்சரியப்படுத்தியது.
இராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் உண்மையான பாகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.அவை குறித்த தகவல்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன.
கிரையோஜெனிக் என்ஜின்,சந்திரயான் 1, மங்கள்யான் குறித்த அரிய செய்திகள் மாணவர் சிந்தனையைத் தூண்டுபவையாக இருந்தன.
ஆரியப்பட்டா முதல் GSLV மாக் 29 வரையிலான இராக்கெட்டுகளின் செயல்பாடுகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
விண்வெளிக் குப்பைகளை நீக்கும் முறை குறித்த வினாவிற்கு மாணவர்கள் புதுமையான பதில்களைக் கூறினர்.
அடுத்து ISRO வின் தோற்றம் முதல் இன்று வரையிலான வரலாறு மற்றும் சாதனைகள் ஆவணப் படமாகக் காட்டப்பட்டன.
விக்ரம் சாராபாய் முதல் சிவன் வரை இஸ்ரோவின் இயக்குநர்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் குழுக்களின் சாதனைகள் ஆவணப்படத்தில் காட்டப்பட்டன.
ஒளிப்படத்தில் காட்டப்பட்ட,தமிழர்களுக்கு பெருமை அப்துல் கலாம் அவர்கள் மற்றும் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் வரலாறு மற்றும் சாதனைகள் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தன.
மதிய உணவினை முடித்துக் கொண்டு அடுத்ததாக பிளானட்டோரியம் பார்வையிட வாய்ப்பு கிடைத்தது.
பல்வேறு தாவர உயிரிகள் மற்றும் அவற்றின் தனித்தன்மைகள் மற்றும்
சிறப்புகள் குறித்த தகவல்கள் எங்கள் குழுவினருக்கு ஆச்சரியம் அளித்தன.
அடுத்ததாக அறிவியல் விளையாட்டு மையத்திற்குள் நுழைந்தோம்.அறிவியல் விளக்கங்களுடன்,
அறிவியல்பூர்வமாக அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு அரங்கமும், அந்த விளையாட்டுகளுக்கான விளக்கங்களும் அற்புதமாக இருந்தன.
இறுதியாக Hello earth என்ற அறிவியல் 3D ஆவணப்படம் மிகுந்த பிரமிப்பு அளிப்பதாய் இருந்தது.மனிதன் தோன்றியது முதல் இன்று வரையிலான மொழியின் வளர்ச்சி,தகவல் தொழில்நுட்பத்தின் அசுரப் பாய்ச்சல்,அண்டங்கள் மற்றும் பேரண்ட ஆச்சரியங்கள், எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் வேற்றுகிரக மனிதனுக்கான தகவலை மனிதர்களாகிய நாம் அளித்துள்ள முறை குறித்த முப்பரிமாண ஆவணப் படம் மாணவர்களை உச்ச பட்ச ஆச்சரியப்படுத்தியது என்றால் அது மிகையில்லை.
மிகக் சிறந்த அனுபவங்களைப் பெற்ற நம் அரசுப் பள்ளி மாணவர்கள் தாமும் விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தை கைக்கொண்டவர்களாய், அறிவுடனும்,மகிழ்வுடனும் ஆய்வு மையத்திலிருந்து திரும்பினர்.
சிறு தீப்பொறி பெரும் நெருப்பிற்கு ஆரம்பம் அன்றோ?
ISRO நிறுவனத்திற்கும்,நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Open Space Foundation அமைப்பிற்கும், மூலகாரணமாய் விதையிட்ட KOY-ICT Group Admins மற்றும் உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
தினமலர் - பயணக் கட்டுரை
புகைப்படத் தொகுப்பு:
Congrats sir
ReplyDeleteThank you miss
DeleteSuperb bro
ReplyDeleteThank you
DeleteCongrats sir you done a good job.Let your dreams come true.
ReplyDeleteThank you
Delete