Sep 26, 2019

Mobile banking-பாதுகாப்புக் குறிப்புகள் :



மொபைல் பேங்கிங் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில குறிப்புகள் :

1.டிஜிட்டல் வாலெட்
அப்ளிகேஷன்களில் சிரமம் பார்க்காமல்
மிகவும் கடினமான பாஸ்வேர்டுகளைப்
பயன்படுத்துங்கள்.அதை அடிக்கடி
மாற்றுங்கள்.

2.உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும்
லாக் செய்யப்பட்ட நிலையிலேயே
இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3.பொது இடங்களில் இலவசமாகக்
கிடைக்கும் வைஃபையை
பயன்படுத்தி,பணப்பரிவர்த்தனை
செய்யாதீர்கள்.வீட்டை விட்டு வெளியே
வந்தால்,வை-ஃபை அணைத்தே
வையுங்கள்.

4.புதிதாக வருகிற பாதுகாப்பு
அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.

5.எந்த ஆப்பினை நீங்கள்
பயன்படுத்தினாலும் அதைப்
பயன்படுத்தியபின் அதை விட்டு
முழுமையாக வெளியே வாருங்கள்.

6.அடிக்கடி உங்களுடைய
கணக்கு வழக்குகளைச் சரி பார்த்து,
ஏதேனும் சந்தேகப்படும்படி யான
பரிவர்த்தனை நடந்திருக்கிறதா
என்பதை கவனியுங்கள்.

7.பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள்
ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.

8.சிறப்பு வைரஸ் பாதுகாப்பு
மென்பொருள்களைப்
பயன்படுத்துங்கள்.
உங்கள் ஸ்மார்ட் போன் எப்போதும் லாக்
செய்யப்பட்ட நிலையில்
இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

9.சந்தேகத்திற்கிடமான தளங்களில்
ஆன்லைன் பரிவர்த்தனை
செய்யாதீர்கள்.

10.உங்கள் பாஸ்வேர்டு,பயனர் பெயர்,
மின்னஞ்சல் பாஸ்வேர்டு
போன்றவற்றை எப்போதும் பாதுகாப்பாக
வைத்திருங்கள்.

No comments:

Post a Comment