Nov 20, 2024

ஆறு வகைக் காதல்

 




4 மாதங்களுக்கு மேல் ஒருவர் மேல் உள்ள ஈர்ப்பு, காதல் என்கிறது உளவியல். பல பேருக்கு அது உறுத்தலாக இருக்கும், "எனக்கு பல நண்பர்களுடன் 4 மாதங்களுக்கு மேலான ஈர்ப்பு இருக்கிறதே அதுவும் காதலா?" என்ற குழப்பம்.


உண்மையில் காதல் என்ற வார்த்தையை செக்ஸ் என்ற வார்த்தையுடன் கலந்து குழப்புவது சமூகத்தின் பொது கண்ணோட்டம்.அதனால் வரும் குழப்பம் இது. இதனால், ஒரு சின்ன தேடலுக்கு பின் உளவியல் ஆராய்ச்சிகள் காதலை பற்றி என்ன சொல்கிறது என்பது இங்கே...


காதல் மொத்தம் 6 வகைப்படுகிறது:


1) Eros - உடல் மற்றும் மனது சார்ந்தது. இது அழகு வயப்பட்டது.

நாம் அதிகம் காணும் கண்டதும் காதல் அல்லது சினிமாட்டிக் "ரொமான்ஸ்" காதல். 😉


2) Ludus - ஒரு விளையாட்டு அல்லது போட்டி சார்ந்த காதல். அவ்வளவு சீரியஸ் தன்மை இல்லாதது. ஒரே நேரத்தில் ஒருவருக்கு மேல் காதல் கொள்ளும் மனப்பான்மை கொண்டது.


3) Storge - ஒரு உள்ளார்ந்த அன்பினால் ஏற்படுவது நட்பு ரீதியான பழக்கத்துக்கு பின்... தன்னை போலவே இருக்கும் குணம் உணர்ந்து.... வெகு நாட்களுக்கு பின் வரும் காதல்.


4) Pragma - மூளையில் உதிக்கும் காதல், அதாவது சாதக பாதகங்களை அலசி நன்மை கருதி கொள்ளும் காதல்.


5) Mania - பைத்தியக்காரதனமான/ வெறித்தனமான காதல், அளவுக்கு அதிகமான 'என்னுடயது' என்ற உணர்வை (pocessiveness) கொண்ட காதல்.


6) Agape - சுயநலமில்லாத... "atruistic" - கருணை காதல். இறைவன், நோயாளிகள், மாற்றுதிறனாளிகள் மேல் வைக்கபடும் அன்பு. 🙂


இது அனைத்தும் காதலே....!

No comments:

Post a Comment