Mar 10, 2019

கல்வி தொலைக்காட்சி - தகவல்




கல்வி தொலைக்காட்சி :

அனைவருக்கும் வணக்கம்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜுன் 1 முதல் கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய சேனல் ஒளிபரப்பப்பட உள்ளது.அதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 03/03/19 அன்று Channel Head திரு.அமலன் ஜெரோம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நம் ஆசிரியர்கள் தொலைக்காட்சி நிகழ்சிகள் ஒளிபரப்பு குறித்த தங்களது புதுமையான யோசனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை அளிக்குமாறு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமது பள்ளியின் மற்றும் பிற பள்ளிகளின் எந்நிகழ்வுகளை நாம் ஒருங்கிணைக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்ச்சிகள் தரமானவையாகவும்,
வீடியோக்கள் HD தரத்திலும் எடுக்கப்பட உள்ளன.

அறிவியல்,தொழில்நுட்பம், நடனம்,பாடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறனுடைய நம் ஆசிரியர்கள்,கல்வி
தொலைக்காட்சியின் தொடர் நிகழ்வுகளில் சிறப்பான பங்களிப்பும், ஒத்துழைப்பும் வழங்குவீர்கள் எனும் நம்பிக்கை உள்ளது.

கீழ்வரும் pdf இல் உள்ள 17 நிகழ்ச்சிகளின் தலைப்புகள் சார்ந்து ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதில் ஏதேனும் நிகழ்ச்சியை இம்மாதம் தங்கள் பள்ளியில் அல்லது தங்களது அருகாமைப் பள்ளிகளில் நடத்த வாய்ப்பு இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள்.

ஏற்கனவே பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகளை மேம்படுத்தி வீடியோ எடுத்து அனுப்பவும்.அது குறித்து விவாதம் நடத்தப்பட்டு,மாற்றம் செய்ய வேண்டிய,நீக்க வேண்டிய மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த தெளிவுகள் வழங்கப்படும்.Script,
Outdoor shooting,Dress code  உள்ளிட்ட அனைத்திலும் முழுமையான உதவிகள் வழங்கப்படும்.

நமது பள்ளியின் சிறப்பான நிகழ்வுகளை ஒளிபரப்பிற்கு அளிப்பதன் மூலம்,நமது பள்ளியின் சிறப்புகளை உலகறியச் செய்ய முடியும்.

நன்றி.

- சரவணன்

நிகழ்ச்சி நிரல் :

https://drive.google.com/file/d/1KR34E-cDpe0scOpuYSNv45QPk_iKFPPg/view?usp=drivesdk


No comments:

Post a Comment